தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில், சாக்கு பையில் சுற்றி குப்பையில் தூக்கி வீசப்பட்ட, பிறந்து சில மணி நேரங்களேயான ‘பெண் சிசுவை’ திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மீட்டு காப்பாற்றியுள்ளார்.
இது குறித்து திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமாரிடம் பேசினோம்:
நேற்று (23.02.2021) காலை அவருக்கு வந்த இரகசிய தகவலையடுத்து ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவிரி நகர் பகுதிக்கு காலை 6.15 மணிக்கு சென்றுள்ளார். அங்கு குப்பைகளுக்கு மத்தியில் கிடந்த சாக்கு பையில் இருந்து ஏதோ சப்தம் வருவதை கண்ட ஜெயக்குமார், சிறிதும் தாமதிக்காமல் சாக்கு பையை திறந்து பார்த்துள்ளார். தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில், பிறந்து சில மணி நேரங்களேயான அழகான பெண் குழந்தை அங்கே இருப்பதையறிந்து, அந்த பெண் சிசுவை சாக்கு பையில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளார்.
தற்போது அக்குழந்தை திருச்சி அரசு தலைமை மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், குழந்தையை வீசியெறிந்த இரக்க மற்ற அரக்கர்ளை தேடும் பணியில், காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு சம்பவம், ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்ட, கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில் உள்ள யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி அருகாமையில், நடந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
-படங்கள்: ஆர்.சிராசுதீன்.