அம்மாவை சந்தித்த மு.க.அழகிரி!

dhayaluammal.jpg mka

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மனைவியும், மு.க.அழகிரியின் தாயாருமான தயாளு அம்மாளை  சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் இன்று (26.03.2014) மு.க.அழகிரி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டில் இல்லை. அவர் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, மு.க.அழகிரி தனது தாயாரை சந்தித்துள்ளார். தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது தாயார் தயாளு அம்மாளை, மு.க.அழகிரி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.