மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 7-ம் தேதி பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத ரீதியாகப் பேசியதாகவும், மத்தியப் படைகளுக்கு எதிராக வெகுண்டெழுமாறு வாக்காளர்களை தூண்டியதாகவும், அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரச்சாரத்தில் ஈடுபட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (12.04.2021) தடை விதித்தது.
நேற்று (12.04.2021) இரவு 8 மணி முதல் இன்று (13.04.2021) இரவு 8 மணி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து, இன்று கொல்கத்தா காந்தி மூர்த்தி பகுதியில் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய தேர்தல் ஆணையம் விதித்த பிரச்சாரத்திற்கானத் தடையை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டமாக மாற்றியது, இதுவே அவருக்கு மிகப் பெரிய விளம்பரமாக மாறியுள்ளது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
ECI-Order-dated-12-April-2021-to-Ms.-Mamata-Banerjee
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com