சுயநினைவு இன்றி இருக்கும் நடிகர் விவேக்!-சென்னை சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை.

நடிகர் விவேக்.

SIMS Hospital

DR. VIJAYAKUMAR CHOCKKAN,
DIRECTOR OF MEDICAL SERVICES

நடிகர் விவேக்.

நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சுயநினைவு இன்றி எங்களது மருத்துவமனையில் இன்று (16.04.2021) காலை 11மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது எக்மோ உயிர்காக்கும் கருவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைக்கு அவரது உடல் நிலை மோசமாக தான் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டதால் விவேக்கிற்கு பாதிப்பு ஏற்படவில்லை. இது முழுக்க முழுக்க மாரடைப்பால் ஏற்பட்ட பிரச்னை மட்டுமே.

இவ்வாறு சென்னை, வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply