புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15ஆவது சட்டபேரவைக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 மற்றும் பாஜக 6 தொகுதிகளிலும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவராக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதற்காக ஆட்சியமைக்க உரிமை கோரும் கடித்ததை கடந்த மே-3ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம், ரங்கசாமி வழங்கினார்.
இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் Dr.தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும்,ரகசிய காப்பு பிரமாணமும் இன்று (07.05.2021) செய்து வைத்தார்.
என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக-வுக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com