Towards fostering friendly relations with its maritime neighbours, Indian Navy hosted ‘GMS-21’ under the aegis of Naval War College, Goa on 11 and 12 May 21. Owing to the COVID-19 pandemic, the event for the first time was hosted in virtual mode, with online participation of Naval representatives from 13 Indian Ocean Littoral countries, which included India, Bangladesh, Comoros, Indonesia, Madagascar, Malaysia, Maldives, Mauritius, Myanmar, Seychelles, Singapore, Sri Lanka and Thailand. The theme for GMS-21 was focused on “Maritime Security and Emerging Non-Traditional Threats: A Case for Proactive Role for IOR Navies,” with emphasis on capacity building amongst the IOR Navies to tackle emerging common maritime threats.
With the Indian Ocean becoming the locus of 21st century strategic landscape, the symposium will play a constructive role in bringing together the stakeholders who have a role in evolving strategies, policies and implementation mechanisms on the issues of common interest in maritime domain. In addition to presenting cooperative strategies for enhancing interoperability among partner maritime agencies, the event provided a forum for articulation of views on the crucial maritime issues, followed by theme based discussions.
Commodore Nitin Kapoor, Deputy Commandant Naval War College welcomed the member participants through a welcome address post which the symposium was formally inaugurated by Rear Admiral Sai Venkat Raman, VSM, Commandant Naval War College, who also delivered the key note address. Commodore Shantanu Jha, Commodore (Foreign Cooperation), in his closing address, thanked all member countries for their valuable contribution during the Goa Maritime Symposium-21
********************
இந்திய கடல் பகுதிகளில் புதிய அச்சுறுத்தல்களை சமாளிப்பது குறித்து கோவா கடல்சார் கருத்தரங்கில் இந்திய கடல் பகுதி அண்டை நாடுகள் ஆலோசனை நடத்தின.
இந்திய கடல் பகுதி அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்ப்பதற்காக, கோவா கடல் சார் கருத்தரங்கு-21-ஐ இந்திய கடற்படை, கோவாவில் உள்ள கடற்படை போர் கல்லூரியின் கீழ் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடத்தியது. கொவிட் தொற்று காரணமாக இந்நிகழ்ச்சி முதல் முறையாக காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. இதில் இந்திய கடல் பகுதியையொட்டி அமைந்துள்ள வங்கதேசம், கொமராஸ், இந்தோனேஷியா, மடகாஸ்கர், மலேஷியா, மாலத்தீவு, மொரீசியஸ், மியான்மர், செசல்ஸ், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்றன. ‘‘கடல்சார் பாதுகாப்பு மற்றும் புதிய அச்சுறுத்தல்கள் : இந்திய கடல் பகுதியில் கடற்படைகள் செயல்திறனுடன் பங்காற்றுவதற்கான விஷயம்’’ என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைப்பெற்றது. புதிதாக உருவாகும் கடல்சார் அச்சுறுத்தல்களை சமாளிக்க, இந்திய கடல்பகுதியில் கடற்படைகளின் திறனை மேம்படுத்துவது குறித்து இதில் வலியுறுத்தப்பட்டது.
21ம் நூற்றாண்டில் முக்கியமான பகுதியாக இந்தியப் பெருங்கடல் பகுதி மாறியுள்ளதால், பொதுநல பிரச்சனைகளுக்கான உத்திகள், கொள்கைகளை வகுத்து அமல்படுத்துவதில் இந்த கருத்தரங்கம் முக்கிய பங்கு வகிக்கும்.
முக்கிய கடல்சார் பிரச்னைகள் குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு சிறந்த அமைப்பாக இந்த நிகழ்ச்சி இருந்தது.
இதைத் தொடர்ந்து பல விஷயங்கள் குறித்து விவாதங்களும் நடைப்பெற்றன.
கடற்படை போர் கல்லூரியின் துணை கமாண்டன்ட், கமடோர் நிதின் கபூர், இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை வரவேற்றார். கடற்படை போர் கல்லூரியின் கமாண்டன்ட், ரியர் அட்மிரல் சாய் வெங்கட் ராமன் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். கோவா கடல்சார் கருத்தரங்கில், இந்திய கடலோர நாடுகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்ததற்கு வெளிநாட்டு ஒத்துழைப்பு பிரிவு அதிகாரி கமடோர் சந்தானு ஜா , நிறைவு உரையில் நன்றி தெரிவித்தார்.
–எஸ்.சதிஸ் சர்மா.