நடிகர் விஜயகாந்த் நலமாக உள்ளார்!

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் மூச்சுத் திணறலால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகதான் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். எனவே, பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என, தேமுதிக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (19.05.2021) முற்பகல் 11:12 மணிக்கு சென்னை மியாட் மருத்துவமனை நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு நடிகர் விஜயகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்தோம். அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். மேற்கொண்டு விரிவான தகவல் வேண்டுமானால் விஜயகாந்த் மனைவியிடமோ (அல்லது) அவரது செகரட்டியிடமோ கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

எது எப்படியோ, மூத்த நடிகரும், முன்னாள் தமிழக எதிர் கட்சித் தலைவருமான விஜயகாந்த் நலமாக இருந்தால் அதுபோதும். ஏனென்றால், நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத நல்ல மனிதர்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply