நட்சத்திர விடுதிகளில் தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லை!-இது விதிகளுக்கு எதிரானது!- மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! -மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிரடி உத்தரவு.

சொகுசு தனியார் விடுதியில் ஒரு நாள் தங்கி மேற்காணும் வசதிகளுடன் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள ரூ. 2999/- கட்டணம் என்று, நட்சத்திர அந்தஸ்துள்ள ‘Radisson’ என்ற தனியார் நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தை அடுத்து, நட்சத்திர விடுதிகளில் தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லை; இது விதிகளுக்கு எதிரானது; மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கீழ் காணும் கண்டிப்பான உத்தரவை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது.

அதன்படி, அரசு மருத்துவமனையில் செயல்படும் ‘கொரோனா’ தடுப்பூசி மையங்கள் மூலமாகவும்; தனியார் மருத்துவமனையில் உள்ள ‘கொரோனா’ தடுப்பூசி மையங்கள் மூலமாகவும் மற்றும் முன்களப்பணியாளர்கள், பொதுமக்களுடன் அதிக தொடர்பில் இருக்கும் அரசு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு, அரசு மருத்துவமனை சார்பாக முகாம்கள் அமைத்தும் ‘கொரோனா’ தடுப்பூசிகள் போடலாம் என்றும்; மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் முகாம்கள் அமைத்து, ‘கொரோனா’ தடுப்பூசி போடலாம் என, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply