Indian Army celebrated the 100th anniversary of the raising of Army Educational Corps (AEC) on 01 June 2021. On this occasion, Maj Gen Devesh Gaur, Additional Director General Army Education and Colonel Commandant, AEC laid wreath at the National War Memorial on behalf of all ranks of the Army.
History of the AEC dates back to 1921 when the mass scale of illiteracy amongst the Indian soldiers were prevalent. Since then, many remarkable developments have seen AEC grow over the years adapting seamlessly to the rapid growth of education and technology as also the organisational needs.
The Corps is rendering yeoman service in conduct of Map Reading training, Academic training at Pre-Commission Training Academies, capability development in foreign languages, Military Music, handling of Right to Information cases and shaping young minds in various Rashtriya Military Schools and Sainik Schools. Implementation of informal educational programmes like IGNOU Army Education Project (IAEP) and NIOS Education Project for Indian Army (NEPIA) to ensure continuing education for personnels, wards and dependents are other notable initiatives undertaken by the Corps. As the field of knowledge and education expands aligning itself to the technology advancement, the Army Educational Corps is prepared to meet the emerging challenges and the organisational needs in time to come.
XXXXXXXXX
ராணுவக் கல்விப்பிரிவின் 100-வது ஆண்டை இந்திய ராணுவம் இன்று (ஜூன் 1, 2021) கொண்டாடியது. இதை முன்னிட்டு ராணுவக் கல்வியின் கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும், ராணுவக் கல்விப்பிரிவின் கர்னல் கமாண்டன்ட் மேஜர் ஜெனரல் தேவேஷ் கௌர் தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவ வீரர்களின் சார்பாக மரியாதை செலுத்தினார்.
கடந்த 1921-ஆம் ஆண்டு இந்திய வீரர்களிடையே போதிய படிப்பறிவின்மை இல்லாத காலத்தில் ராணுவ கல்விப்பிரிவின் வரலாறு தொடங்கியது. அதுமுதல் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் நிறுவன தேவைகளின் மேம்பாட்டிற்கேற்ப சீரான வளர்ச்சியை இந்தப் படை அடைந்துள்ளது.
வரைபட ஆய்வு பயிற்சி, கல்விப் பயிற்சி, அயல் நாட்டு மொழிகளில் திறன் மேம்பாடு, ராணுவ இசை, தகவல் அறியும் உரிமை வழக்குகளைக் கையாளுதல், ராணுவப் பள்ளிகள் மற்றும் சைனிக் பள்ளிகளில் இளைஞர்களை நெறிமுறைப்படுத்துவது போன்ற உன்னத சேவையை இந்தப்பிரிவு அளித்து வருகிறது.
ராணுவ வீரர்கள், அவர்களது குழந்தைகள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் இடையறாது கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதற்காக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ராணுவ கல்வித் திட்டம், தேசிய திறந்தநிலை பள்ளியின் இந்திய ராணுவத்திற்கான கல்வித்திட்டம் முதலிய முறைசாரா கல்வித் திட்டங்களை ராணுவ கல்விப் பிரிவு செயல்படுத்தி வருகிறது. தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு இணையாக அறிவு சார் மற்றும் கல்வித்துறை விரிவடயும் சூழலில், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தப் பிரிவு தயார் நிலையில் உள்ளது.
–எஸ்.சதிஸ் சர்மா.