உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தென்கொரிய கப்பல் கேப்டனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த இந்திய கடலோர காவல் படையினர்! -கோவா அருகே நடுக்கடலில் நடந்த நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்.

Indian Coast Guard (ICG) successfully conducted a swift sea-air coordinated medical evacuation off Goa on June 06, 2021. Information was received at 0430 hours at Maritime Rescue Coordination Centre (Mumbai) that the captain of a ship, MT ELIM, a 50-year old South Korean national needed emergency medical assistance. The Marshall Island flag vessel, that was about 109 nm south west of Goa at that time, was directed to proceed towards Goa, while a swift operational plan was drawn by Coast Guard District HQ Goa for safe evacuation of the patient. 

At 0530 hrs, ICG ship C-158 sailed out from Goa, maintaining continuous communication with MT ELIM. For speedy evacuation of the patient, ICG Chetak helicopter was deployed from Coast Guard Air Enclave (Goa). Braving gusting monsoon winds, the helicopter reached the vessel and airlifted the patient with the help of aircrew diver. The patient was safely brought ashore and shifted to SMRC hospital in Vasco, Goa where his condition is reported to be stable

கோவா அருகே மருத்துவ உதவி தேவைப்பட்ட வணிக கப்பல் கேப்டனை, இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது.

மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து, இந்திய கடலோர காவல் படைக்கு இன்று காலை 4.30 மணியளவில் ஒரு அவசர அழைப்பு வந்தது. கோவாவுக்கு தென்மேற்கே 109 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள எம்.டி எலிம் என்ற சரக்கு கப்பலில், 50 வயதான தென்கொரிய கேப்டனுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோவாவிலிருந்து இந்திய கடலோர காவல் படை கப்பல் சி-158, மீட்பு பணிக்கு இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது. மீட்பு பணியை துரிதமாக மேற்கொள்ள கடலோர காவல் படையின் சேத்தக் ரக ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது. மோசமான வானிலையிலும், அந்த ஹெலிகாப்டர் மார்ஷல் தீவைச் சேர்ந்த எம்.டி.சலீம் என்ற அந்த கப்பலை நெருங்கியது. ஹெலிகாப்டரில் சென்ற டைவர் கப்பலில் இறங்கி நோயாளியை பத்திரமாக ஹெலிகாப்டரில் ஏற்றினார்.

கோவாவின் வாஸ்கோ நகரில் எஸ்எம்ஆர்சி மருத்துவமனையில், சரக்கு கப்பல் கேப்டன் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது.

இதை பார்க்கும்போது,

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
.

-என்ற வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தைகள்தான் என் நினைவுக்கு வருகிறது.

தமது கடமையை சரியான தருணத்தில் தாமதமில்லாமல் செய்த இந்திய கடலோர காவல் படைக்கு எமது வாழ்த்துக்கள்…!

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply