மூக்கு வழியாக பயன்படுத்தும் ‘கொரோனா’ சொட்டு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும்!- நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை.

File photo

கொரோனா 2-வது அலைக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. அதில், இந்தியா பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளது. ஏராளமானோர், தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். கடந்த நூற்றாண்டில் பெரிய பேரிடராக இது அமைந்துள்ளது. நவீன உலகம் கொரோனா போன்ற ஒரு பேரிடரை கண்டதில்லை.100 வருடங்களில் மிகவும் மோசமான பெருந்தொற்று இதுவாகும். ஆனால் இந்த நெருக்கடி காலத்தில் நமது நாடு ஒற்றுமையுடன் நின்றது. மருத்துவமனைகளையும், புதிய சுகாதார உள்கட்டமைப்பையும் அதிகளவில் ஏற்படுத்தி உள்ளோம். முழு உடல் கவச உடைகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதுடன், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியும் விரைவுபடுத்தப்பட்டது.

மருத்துவமனைகள் அமைப்பதில் விரைவாக செயல்பட்டோம். புதிய சுகாதார உள்கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளோம் . ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தேவை கணிக்க முடியாத அளவிற்கு ஏற்பட்டது. ரயில் விமானம் டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்டது.போர்க்கால அடிப்படையில் செயல்பட்டோம். மக்களுக்கு உதவ முப்படைகள் ஈடுபடுத்தப்பட்டன. அத்தியாவசிய மருந்துகள் உற்பத்தி வேகமாக அதிகரிக்கப்பட்டது. கோவிட் பாதிப்பை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பை 1.5 ஆண்டுகளில் வலுப்படுத்தி உள்ளோம்.

நமது விஞ்ஞானிகள் மீது இந்தியா நம்பிக்கை வைத்து உள்ளது. இன்னும் ஒரு ஆண்டில் கோவிட்டை தடுக்க இன்னும் 2 தடுப்பூசி விரைவில் வரவுள்ளது. மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். மூக்கில் விடும் வகையிலான கோவிட் தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும்.

தடுப்பூசிக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு கடந்தாண்டு ஏப்ரல் மாதத்திலேயே துவங்கிவிட்டது. வரும் நாட்களில் தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படும். தடுப்பூசி தயாரிப்பதற்கு முன்பே முன்களப்பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றினர். மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருவது இந்தியாவின் சாதனை.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply