துபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ. 63.20 லட்சம் மதிப்புள்ள 1.25 கிலோ தங்கம் பறிமுதல்!

துபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடம், 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 63.20 லட்சம். தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

உளவுத் தகவல் அடிப்படையில் துபாயில் இருந்து சென்னை வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த கபரி சமினோ ஜேசய்யா(26) என்பவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரது பெல்ட் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டில் இருந்து 9 பாக்கெட்டுகளில் 1.42 கிலோ எடையில் தங்க பசைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றிலிருந்து 1.25 கிலோ எடையுடைய சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.63.20 லட்சம்.

இதையடுத்து ஜேசய்யா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply