சென்னையிலிருந்து 450 கி.மீ தூரத்தில் போர்த்துகீசிய கப்பலில் எண்ணெய் கசிவு!-இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை.

Indian Coast Guard (ICG) received information from Maritime Rescue Coordination Centre (MRCC) Colombo in late hours of June 16, 2021 about a mid-sea oil spill about 450 kms South East of Chennai. On further investigation, it was revealed that a Portuguese flag Container ship MV Devon, on passage from Colombo to Haldia, West Bengal, developed an underwater crack in the fuel tank containing about 120 KL of Very Low Sulphur Fuel Oil

The crack resulted in spillage of about 10 KL of oil into the sea before preventive action was taken and remaining oil in tank was transferred to another tank by the ship’s crew. The vessel is carrying 10,795 tonnes of general cargo in 382 containers and manned by 17 crew. The ship is continuing its voyage to Haldia and likely to reach on June 18, 2021.

The ICG is in continuous contact with MV Devon and the master has reported that the vessel is stable. ICG Pollution response team at Chennai has been alerted and kept on standby. In addition, ICG ships & aircraft deployed at sea are also put on alert in pollution response configuration.

சென்னையிலிருந்து தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தூரத்தில் கடலில் எண்ணெய் கசிவு இருப்பதாக, கொழும்பு கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து (எம்.ஆர்.சி.சி) 2021 ஜூன் 16 அன்று, இந்திய கடலோர காவல்படைக்கு (ஐ.சி.ஜி) தகவல் கிடைத்தது. மேலதிக விசாரணையில், கொழும்பிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்கு செல்லும் வழியில், எம்.வி.டெவன் என்ற போர்த்துகீசிய கொள்கலன் கப்பலின், எரிபொருள் தொட்டியில் (நீருக்கடியில்) விரிசல் உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதில், சுமார் 120 கிலோ லிட்டர், மிகக்குறைந்த சல்பர் எரிபொருள் எண்ணெய் இருந்தது.

தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னர், சுமார் 10 கிலோ லிட்டர் எண்ணெய் கடலுக்குள் கசிந்ததால், தொட்டியில் மீதமுள்ள எண்ணெய்யை கப்பல் குழுவினர் மற்றொரு தொட்டிக்கு மாற்றினர். இந்தக் கப்பல் 382 கொள்கலன்களில் 10,795 டன் பொது சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளது. கப்பலில் 17 பணியாளர்கள் உள்ளனர். இந்த கப்பல் ஹால்டியாவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இது 2021 ஜூன் 18 அன்று ஹால்டியாவை அடையும்.

இந்திய கடலோர காவல்படை(ஐ.சி.ஜி), எம்.ஜி.டெவோனுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும், கப்பல் நிலையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டு குழு எச்சரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக, ஐ.சி.ஜி கப்பல்கள் மற்றும் கடலில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களும் தயார் நிலையில் உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply