இலங்கை வடமேற்கு கடற்படையினர் 2021 ஜூன் 17 ஆம் தேதி மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, புட்டலத்தில் உள்ள பெரியபாடு என்ற பகுதியில் 2 இந்திய மீன்பிடிப் படகுகளையும், அதே நாளில், இலங்கை கடலோர காவல்படையினர் டோண்ட்ரா லைட்ஹவுஸிலிருந்து சுமார் 09 கடல் மைல் தொலைவில் நடத்திய ரோந்துப்பணியின் போது மற்றொரு இந்திய மீன்பிடி படகையும் கண்டுபிடித்தனர்.
ஆள் இல்லாத இந்த வெற்று இந்திய மீன்பிடிப் படகுகள் எப்படி இலங்கை கடல் பகுதிக்கு போனது?! படகுகள் இங்கு இருக்கிறது; படகின் உரிமையாளர்கள் எங்கு இருக்கிறார்கள்?! என்பது தற்போது கேள்வி குறியாக உள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நீரோட்டங்களின் தாக்கத்தால், இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு வந்திருக்கலாம் என்று இலங்கை கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடலோர காவல் படையினர் சொல்லும் இந்த கருத்து; எந்தளவுக்கு உண்மை என்பதை, இந்திய கடலோர காவல்படையினர் போர்கால அடிப்படையில் உடனே தீர விசாரிக்க வேண்டும்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com