Minister of Steel & Petroleum and Natural Gas Shri Dharmendra Pradhan today addressed the webinar on “Making Eastern India a Manufacturing Hub with respect to metallurgical industries”, organised by Indian Institute of Metals. The Webinar was attended by the experts from the metals sector, officials of Ministry of Steel, and state government representatives.
Shri Pradhan, speaking on the occasion, said that Hon’ble Prime Minister Shri Narendra Modi is working on the mission to bring eastern India at par with other developed regions of the country. With a skilled human capital, abundance of natural resources and an aspirational population, eastern India is poised to create a tech-enabled manufacturing ecosystem. He said that very few nations are blessed with the abundance of natural resources as much as eastern India is. He spoke in detail about the Mission Purvodaya launched also in the steel sector and its potential to spur a new era of development in the eastern India. He also spoke about efforts made by the Government of India in giving boost to logistical infrastructure in the eastern India including inland waterways. Shri Pradhan spoke about the rich heritage of architecture, maritime economy and also industrial development in eastern India and said that time has come to reclaim that glory.
Speaking about sustainable development, Shri Pradhan said that development and ecology can co-exist. He spoke about the leadership provided by Shri Narendra Modi in moving towards a greener future for the world. He said that Governments need to promote industrial development along with sustainable development and policies have to be more people, business and environment friendly. He called upon Indian Institute of Metals to help create greener, cleaner and thus more sustainable products around ‘green steel’.
Speaking about Industrial Revolution 4.0, he said that we must seize the opportunity and create new, innovative and sustainable business models.
XXXXXXXXX
‘கிழக்கிந்தியாவை உலோகத் தொழில் தொடர்பான உற்பத்தி மையமாக ஆக்குதல்’’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை இந்திய உலோகங்கள் மையம் நடத்தியது.
இதில் உலோகத்துறை நிபுணர்கள், எஃகு அமைச்சக அதிகாரிகள், மாநில அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசியதாவது:
கிழக்கு இந்தியாவை, நாட்டின் மற்ற வளர்ச்சியடைந்த பகுதிகளுக்கு இணையாக கொண்டு வரும் நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோதி பணியாற்றி வருகிறார். திறமையான வேலையாட்கள், அபரிமிதமான இயற்கை வளங்கள், ஆசையுள்ள மக்கள் உள்ளதால், தொழில்நுட்பத்துடன் கூடிய உற்பத்தி சூழலை உருவாக்க கிழக்கு இந்தியா தயாராக உள்ளது. சில நாடுகளில் மட்டுமே, கிழக்கு இந்தியாவில் உள்ளது போல அபரிமிதமான இயற்கை வளங்கள் உள்ளன.
எஃகு துறையில் தொடங்கப்பட்ட பூர்வோதையா திட்டம் கிழக்கிந்தியாவில் புதிய வளர்ச்சியுகத்தை ஏற்படுத்தக் கூடியது. கிழக்கிந்தியாவில் உள்நாட்டு நீர் போக்குவரத்து வழிகள் உட்பட பல கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. கிழக்கிந்தியா வளமான கட்டிடக்கலை, கடல்சார் பொருளாதாரம், தொழில் வளர்ச்சியை கொண்டிருந்தது. அந்த பெருமையை மீட்டெடுக்கும் நேரம் வந்துள்ளது.
வளர்ச்சியும், சூழலியலும் ஒன்றாக இருக்க முடியும். உலகம் பசுமையான எதிர்காலத்தை நோக்கி செல்ல பிரதமர் திரு நரேந்திர மோடி வழிகாட்டுகிறார். தொழில் வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி மற்றும் கொள்கைகள் ஆகியவை மக்களுக்கும், வர்த்தகத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் அரசு கொண்டு செல்ல வேண்டும்.
பசுமையான, சுத்தமான முறையில் எஃகு தயாரிப்பை மேற்கொள்ள இந்திய உலோக மையம் உதவ வேணடும். தொழில் புரட்சி 4.0-வுக்கு, புதுமையான மற்றும் நிலையான தொழில் மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
–எம்.பிரபாகரன்.