தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்பட பல இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தேசிய வானிலை துறையின் முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சத்தீஸ்கரில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெலங்கானா, கடலோர ஆந்திரப் பிரதேசம், கொன்கன் மற்றும் கோவா, குஜராத், வடகிழக்கு மாநிலங்கள், கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், விதர்பா, ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது 40 முதல் 50 கீ.மீ வேகத்தில் காற்று வீசும். இதே போல் நாட்டின் பல பகுதிகளிலும் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு, மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக் கடல் பகுதி, குஜராத் கடற்கரை, மேற்கு மத்திய வங்காள விரிகுடா, ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதி ஆகியவற்றில் மணிக்கு 40 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. அதனால் இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com