மின்னணு விளையாட்டுகளுக்கு இந்தியாவில் போதிய தகவல்களும் ஆற்றலும் உள்ளன!-பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை.

The Prime Minister Shri Narendra Modi interacted with participants of Toycathon-2021 today via video conferencing. Union Ministers Shri Piyush Goyal and Shri Sanjay Dhotre were present on the occasion.  

Speaking on the occasion, the Prime Minister said that in the last 5-6 years, youth of the nation has been connected with the key challenges of the country through the platform of Hackathons. Thinking behind this is to organize the capabilities of the country and to give them a medium, he said.

Apart from the importance of toys as the first friend of the children, the Prime Minister also emphasized the economic aspects of toys and gaming, he called it ‘Toyconomy’. The Prime Minister said that global toy market is about 100 billion dollars and India haveonly 1.5 per cent of this market. India imports almost 80 per cent of its toys. This means that crores of rupees are being drained out of the country. This needs to change, said the Prime Minister. Shri Modi underlined that, beyond numbers, this sector has the capacity to bring progress and growth to the neediest segments of society. Toy industry has its ownsmall-scale industry, artisans comprising of rural population, dalits, poor people and tribal population. The Prime Minister singled out the contribution of women in the sector. In order to take the benefits to these segments, we need be vocal for local toys. The PM called for new models of innovation and financing to make Indian toys competitive at the global level. There is a need for new ideas to be incubated, new start-ups promoted, taking new technology to traditional toy makers and creating new market demand. This is the inspiration behind events like Toyacathon, the Prime Minister said.

The Prime Minister referred to the cheap data and growth of Internet led rural connectivity and called for exploration of possibilities in virtual, digital and online gaming in India. The Prime Minister rued the fact that most of the online and digital games available in the market are not based on Indian concepts and many such games promote violence and cause mental stress. The Prime Minister highlighted that the world wants to learn about India’s capabilities, art and culture. and society.Toys can play a big role in that.India has ample content and competence for digital gaming. Shri Modi called upon the young innovators and start ups to be mindful of their responsibility of projecting the true picture of India’s capabilities and ideas to the world.

The Prime Minister mentioned that 75th anniversary of India’s Independence is a huge opportunity for the innovators and creators of the toy industry.  Many incidents, stories of our freedom fighters and their valour and leadership can be created into gaming concepts. These innovators have a big role in connecting ‘folk with the future’. There is a need to create interesting and interactive games that ‘engage, entertain and educate’, said the Prime Minister.

XXXXXXXX

டாய்கத்தான்-2021 போட்டியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி காணொலிக் காட்சி வாயிலாக இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் சஞ்சய் தோத்ரே ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த 5-6 ஆண்டுகளாக ஹேக்கத்தான் தளங்கள் வாயிலாக நாடு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுடன் இளைஞர்கள் இணைந்திருப்பதாகக் கூறினார். நாட்டின் திறன்களை ஒழுங்குப்படுத்துவதும், அவர்களுக்கு ஓர் தளத்தை உருவாக்குவதும் இதன் பின்னணியில் உள்ள எண்ணமாகும் என்று அவர் தெரிவித்தார்.

குழந்தைகளின் முதல் நண்பன் என்ற முக்கியத்துவத்தையும் கடந்து “டாய்கானமி” என்று அவர் குறிப்பிட்ட பொம்மைகள் மற்றும் விளையாட்டுகளின் பொருளாதார அம்சங்களையும் பிரதமர் வலியுறுத்தினார். சர்வதேச பொம்மை சந்தை சுமார் 100 பில்லியன் டாலர் அளவில் இருப்பதாகவும் ஆனால் இதில் இந்தியா வெறும் 1.5 சதவீதத்தைப் பெற்றிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

சுமார் 80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. நாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என்பதை இது குறிக்கிறது. இந்தப் போக்கு மாறவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். எண்ணிக்கைகளையும் கடந்து சமுதாயத்தின் தேவைகள் அதிகம் உள்ள துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஆற்றலை இந்தத் துறை பெற்றிருப்பதாக பிரதமர் எடுத்துரைத்தார். ஊரக மக்கள், தலித்கள், ஏழை மக்கள் மற்றும் பழங்குடியினத்தவரை உள்ளடக்கிய கலைஞர்களுடன் தனக்கே உரித்தான சிறு தொழிலை பொம்மை தொழில்துறை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தத் துறையில் பெண்களின் பங்களிப்பை பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார். இந்தத் துறையின் பலன்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உள்ளூர் பொம்மைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்திய பொம்மைகள் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு ஏதுவாக புதிய கண்டுபிடிப்புகளின் நவீன மாதிரிகள் மற்றும் நிதி ஆதரவு அளிக்குமாறு பிரதமர் அழைப்புவிடுத்தார்.

புதிய எண்ணங்கள் மேம்படவும், புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளர்களிடம் புதிய தொழில்நுட்பங்களை எடுத்துச் செல்லவும், புதிய சந்தையை உருவாக்கவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. டாய்கத்தான் போன்ற நிகழ்ச்சிகளின் பின்னணியில் இதுவே உந்துசக்தியாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

குறைந்த கட்டணம் மற்றும் இணைய வளர்ச்சியுடன் கூடிய ஊரக இணைப்பைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இந்தியாவில் மெய்நிகர், மின்னணு மற்றும் இணையதள விளையாட்டுகளின் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயுமாறு கேட்டுக்கொண்டார். தற்போது உள்ள பெரும்பாலான இணையதள மற்றும் மின்னணு விளையாட்டுகள், இந்திய எண்ணங்களின் அடிப்படையில் இல்லாமல் ஏராளமானவை வன்முறையை ஊக்குவித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளன என்று பிரதமர் வருத்தம் தெரிவித்தார். இந்தியாவின் திறன்கள், கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூகம் பற்றி தெரிந்து கொள்ள உலக நாடுகள் ஆர்வமாக இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். அதில் பொம்மைகள் மிகப் பெரும் பங்கு வகிக்கலாம். மின்னணு விளையாட்டிற்கு இந்தியாவில் போதிய தகவல்களும் ஆற்றலும் உள்ளன. இந்தியாவின் திறன்கள் மற்றும் எண்ணங்களின் உண்மை நிலவரத்தை உலகிற்கு வெளிப்படுத்துகையில் இளம் கண்டுபிடிப்பாளர்களும் புதிய நிறுவனங்களும் தங்களது பொறுப்புணர்ச்சியைக் மனதில் கொண்டு செயல்படுமாறும் மோதி கேட்டுக்கொண்டார்.

பொம்மை தொழில்துறையைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு மிகப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். சுதந்திரம் சம்பந்தமான பல்வேறு நிகழ்வுகள், விடுதலைப் போராட்ட வீரர்களின் கதைகள், அவர்களது வீரம் மற்றும் தலைமைப் பண்பு முதலியவை விளையாட்டு கருத்துருக்களாக உருவாக்கப்படலாம். ‘சாமானிய மக்களை எதிர் காலத்துடன்’ இணைக்கும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் பெற்றுள்ளார்கள். ‘ஈடுபாடு, பொழுதுபோக்கு மற்றும் கல்வி’ ஆகியவற்றை அளிக்கும் ஆதரவைத் தூண்டும் வகையிலான விளையாட்டுகளை உருவாக்குவதற்கு அவசியம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

திவாஹர்.

Leave a Reply