Hon’ble Minister of Information and Broadcasting Shri Prakash Javadekar today released the regulations and poster for the 52nd edition of the International Film Festival of India (IFFI). The festival will be held in Goa from 20th -28th November 2021.
The International Film Festival of India (IFFI) is reckoned as one of Asia’s oldest and India’s biggest international film festivals. The 52nd edition of IFFI will be held in a hybrid format considering the success of the 51st edition in January 2021. The Festival is being organized by the Directorate of Film Festivals (DFF), Ministry of Information and Broadcasting, Government of India in collaboration with the State Government of Goa and the Indian Film Industry.
IFFI is recognized by the International Federation of Film Producers Associations (FIAPF). Every year, the festival celebrates some of the finest cinematic works and showcases a bouquet of the best films from India and around the world.
The call for entries for participation in the competitive section of the 52nd edition of the International Film Festival of India will remain open till Aug 31, 2021.
On the occasion of the birth centenary of the maestro of Indian cinema Shri Satyajit Ray, this time the Directorate of Films Festivals, Ministry of I&B, will pay a tribute through a Special Retrospective at the IFFI. Also, in recognition of the auteur’s legacy, the “Satyajit Ray Lifetime Achievement Award for Excellence in Cinema” has been instituted from this year to be given at the IFFI every year starting from this year.
xxxxxxx
2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார்.
ஆசியாவின் பழமையான திரைப்பட விழாக்களில் ஒன்றும், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவுமான இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52-வது பதிப்பு, 51-வது பதிப்பின் வெற்றியை தொடர்ந்து கலப்பு முறையில் நடைபெறும். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட விழாக்களின் இயக்குனரகத்தால் இது நடத்தப்படுகிறது.
சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால் இந்திய சர்வதேச திரைப்பட விழா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரை படைப்புகளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் இந்த விழாவானது, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து சிறந்த திரைப்படங்களை திரையிடுகிறது.
52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் கலந்து கொள்வதற்காக 2021 ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்திய திரையுலக மேதையான திரு சத்யஜித் ரேவின் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது படங்களை இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்களின் இயக்குனரகம் சிறப்பு அஞ்சலியை செலுத்துகிறது. மேலும், அவரது நினைவை போற்றும் விதமாக, ‘திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடர்ந்து வழங்கப்படும்.
–திவாஹர்.