இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, குடியரசுத் தலைவர் மாளிகையில் முதன்முறையாக இன்று (19.07.2021) மதியம் நேரில் சந்தித்தார்.

சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி, சட்டசபை நூற்றாண்டு விழா கொண்டாட, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்த விழாவிற்கு தலைமை ஏற்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவ படம் சட்டசபையில் திறப்பதற்கும், அதேபோல் மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம், கிண்டியில் அமையவுள்ள அரசு மருத்துவமனை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி அமைக்கப்படவுள்ள நினைவுத்தூண் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுவதற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இசைவு தந்துள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply