எதிர்க்கட்சிகள், கடினமான கேள்விகளை எழுப்ப வேண்டும், ஆனால், அமைதியான சூழலில் பதிலளிப்பதற்கு வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும்!-மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோதி நிகழ்த்திய உரை.

Welcome friends and I hope all of you have been vaccinated at least once. But even then, I pray to all of you and my colleagues in the House to cooperate in following the Corona protocols. Vaccine is given in ‘baahu’ (arms), and those who take it become ‘Baahubali’. The only way to become Baahubali to fight against corona is to get vaccinated.

Over 40 crore people have become ‘Baahubali’ in the fight against Corona. It is being taken forward rapidly. The pandemic has gripped the entire world, the entire human race. Therefore, we want meaningful debates in the Parliament over the pandemic. It should be given the highest priority so that we get all the practical suggestions from all the honorable MPs so that there can be a lot of innovation in the fight against the pandemic. If there are some shortcomings, then they can be rectified and we can move forward together in this fight.

I have also requested all the floor leaders to take time out in the evening tomorrow because I want to give them a detailed presentation on the pandemic situation. We want the discussion in the House as well as outside with all the floor leaders, because I have been continuously meeting chief ministers. Discussions are taking place at different forums. It will be convenient if there is a discussion with the floor leaders along with the debate in the House.

Let this session be result oriented with effective debates so that the government can give people the answers sought by them. I would urge all the honorable MPs and all the parties to ask the most difficult and sharpest questions in the Houses but should also allow the Government to respond in a peaceful atmosphere. Democracy is strengthened when truth reaches people. It also strengthens people’s trust and improves the pace of development.

Friends, the internal arrangement during this session is not like the last time, everyone is going to sit and work together because almost everyone has been vaccinated. I once again thank you all very much and urge you to take care of yourself. Let us all work together to fulfil the hopes and aspirations of the country.

நண்பர்கள் அனைவரையும் வரவேற்பதுடன், நீங்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசியையாவது போட்டுக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இருந்தாலும் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி, ஒத்துழைப்பு தருமாறு உங்களையும் எனது அவை நண்பர்களையும் வேண்டிக்கொள்கிறேன். தடுப்பூசி கைகளில் (இந்தியில் ‘பாஹு) செலுத்தப்படுவதால், அதனைப் போட்டுக்கொள்பவர்கள் ‘பாகுபலியாகிறார்கள்’. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பாகுபலியாவதற்கு ஒரே வழி தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது தான்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 40 கோடி மக்கள் பாகுபலியாகியுள்ளனர். இந்தப் பணி விரைவாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஒட்டுமொத்த உலகையும், மனித சமூகம் முழுவதையும் பெருந்தொற்று இறுகப் பற்றியுள்ளது. எனவே பெருந்தொற்று பற்றி நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் வகையில் மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் நடைமுறைக்கு உகந்த கருத்துக்களை கேட்பதற்காக இந்த விஷயத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவை சரிசெய்யப்பட்டு, இந்த போராட்டத்தில் நாம் முன்னேறிச் செல்லலாம்.

பெருந்தொற்றின் நிலை குறித்து விரிவான செய்திகளை நான் பகிர வேண்டியிருப்பதால், நாளை மாலை நேரம் ஒதுக்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளேன். முதலமைச்சர்களை நான் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருவதால், அவையிலும் அவைக்கு வெளியேயும் அனைத்து கட்சித் தலைவர்களுடன் விவாதத்தை மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். வெவ்வேறு மன்றங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவையில் நடைபெறும் விவாதங்களுடன் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடைபெற்றால் வசதியாக இருக்கும்.

மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் பயனுள்ள விவாதங்கள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெறட்டும். மிகவும் கடினமான மற்றும் கூர்மையான கேள்விகளை எழுப்புமாறு மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அமைதியான சூழலில் அரசு பதிலளிக்க அனுமதி வழங்க வேண்டும். உண்மை, மக்களைச் சென்றடையும் போது ஜனநாயகம் வலுப்பெறுகிறது. மக்களின் நம்பிக்கைக்கு அது வலிமை சேர்ப்பதுடன், வளர்ச்சியின் வேகத்தையும் மேம்படுத்துகிறது.

நண்பர்களே, பெரும்பாலும் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதால், அவையின் உள்ளே கடந்த முறையைப் போல அல்லாமல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பணியாற்ற உள்ளனர். உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் நம்பிக்கை மற்றும் லட்சியங்களை நிறைவேற்ற நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.

-எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply