கன மழை காரணமாக த(க)ண்ணீரில் தத்தளிக்கும் கர்நாடகம்!-மீட்புப் பணிகள் தீவிரம்.

கர்நாடகா கடலோர மற்றும் தெற்கு கர்நாடகாவிற்கு ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து மீட்புப் பணிக்கு இந்திய கடலோர காவல்படையினர் (Indian Coast Guard) தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில், கர்நாடகா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்த கன மழை காரணமாக உத்திர கன்னட மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடல்போல் காட்சியளித்தது.

மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களைப் பத்திரமாக மீட்கும் பணியில், இந்திய கடலோர காவல்படையினர் தீவிரமாக தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். இதுவரை Unglijoog Island – 23, Kharejoog Island – 90, Bodojoog Island – 35 ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மொத்தம் 148 நபர்களை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கார்வார் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கத்ரா அணைக்கு நீர்வரத்து அதிகரிதத்துள்ளது.

கன மழை காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதுமே த(க)ண்ணீரில் மிதந்தாலும்; தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு, கர்நாடக ஆட்சியாளர்களுக்கும், கர்நாடக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மனது வராது.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN July 23, 2021 9:23 pm

Leave a Reply