கொரோனா (Covid-19) நோயாளிகளின் இறப்பிற்கு என்ன காரணம்?- திடீர் மரணங்களை தடுப்பதற்கான வழிமுறைகள்..!- என்ற தலைப்பில், கீழ்காணும் இந்த மருத்துவ ஆய்வு அறிக்கையை, இந்திய குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கைய்யா நாயுடு, பிரதமர் திரு.நரேந்திர மோதி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், ஆயுஷ் அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தலைமை இயக்குநர், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை இயக்குநர் மற்றும் தலைமை விஞ்ஞானி, தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன் மற்றும் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்திருந்தேன்.
இந்த மருத்துவ ஆய்வு அறிக்கையில் நான் குறிப்பிட்டு இருந்த ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அக்கறையோடு ஏற்றுக் கொண்டது.
மேலும் ‘ரத்தம் உறைதல்-Blood clotting’’ எனும் ஆபத்தான பாதிப்பு கொரோனா (Covid-19) நோயாளிகளுக்கு ஏற்படுவதால்தான் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று, இந்த மருத்துவ ஆய்வு அறிக்கையில் நான் குறிப்பிட்டு இருந்தேன். இந்த கருத்தை விரிவாக ஆராய்வதற்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தற்போது முன்வந்துள்ளது.
‘கற்ற கல்வியும்; பெற்ற அனுபவமும் மக்களுக்காக பயன்பட வேண்டும்’ -என்ற உயரிய நோக்கத்தோடு, இந்த மருத்துவ ஆய்வு அறிக்கையின் உண்மை நகலை, எந்தவித பிரதி பலனும் கருதாமல், நமது வாசகர்களின் பார்வைக்காகவும்; உலக மக்களின் நலன் கருதியும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு பதிவு செய்துள்ளோம்.
மேலும், இந்த மருத்துவ ஆய்வு அறிக்கையை உலக புகழ்பெற்ற; உலகின் பழமையான, மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த மருத்துவ ஆராய்ச்சி இதழான “தி லேன்செட்-The Lancet” என்ற பத்திரிகைக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்பதை, நமது வாசகர்களின் மேலானக் கவனத்திற்கு இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
WHAT IS THE CAUSE FOR THE DEATH OF COVID-19 PATIENTS?-WAYS TO PREVENT UNEXPECTED DEATHS!
Common symptoms of corona infection include fever, cough, fatigue, shortness of breath and loss of sense of smell. Pneumonia and severe shortness of breath can occur as the disease progresses. There is no antiviral treatment for this. Symptom reduction and supportive therapy are the current practice in Allopathy medicine.
The prevention activities from Corona includes, sanitisation of hands, closing mouth while sneezing and coughing, keeping distance from strangers, wearing face masks in public places, monitoring the persons afflicted with pandemic and self- quarantine.
Keeping social distancing and keeping isolated are the best ways for preventing the pandemic to be spread, than wearing Face mask.
ONLY THE PEOPLE WHO KEEP ALONE WOULD SURVIVE,
OTHERS WOULD SUSTAIN CORONA-NEW KURAL.
There are several activities in the human body that are quite surprising. Like heart beat, hearing, seeing, pregnancy, sleeping, realising the taste and pain, the natural “blood clotting” is also quite surprising. If the blood is not clotted, even a simple injury would result in death.
Such an important aspect of “Blood clotting” is occurring as a chain reaction. The Flat Protein and Pospo Protein combines together and get converted into new Thromboplastin from blood oozing out from the blood vessel. It acts with Blood clotting factors and gets changed into Thrombokinase.
By that time, the protein called Prothrombin starts from liver and it reaches the affected blood vessel due to blood circulation. Having reached that place, it combines with Thrombokinase Calcium metal sand gets converted into Thrombin Enzyme. This reacts with Fibronogen in the blood. As a result, lenghthy Fibrine Fibres are created. This creates a netting. In this net, platelet, blood cells and Plasma are imprisoned. Then, this net shrinks and a blood clot is formed. Like blocking the water tap with a cloth, this blood clot is blocking the torn blood vessel and prevents the bleeding of blood.
Blood clot is like a double edged knife. Only when the blood oozes out from the body, the blood should clot. If the blood is clot during normal circulation in the body, the same would be danger to life. For example, if blood in the Coronary arterial tube which pumps blood to the heart is clot, the same would lead to Heart Attack. If this happens in the Arterial tube in the brain, that will lead to Paralytic attack.
Only since this blood clot which would seriously affect the Covid-19 patients, the death rate is continuously increasing at present.
It is noticed that in the blood samples of persons severely affected by Covid-19, the quantity of D-Dimer is found in excess. Normally the amount of blood clotting and the dimension of tumors are measured by the activity of D-Dimer. Accordingly, not only in blood, but also in any part of the body if blood clots are formed, the quantity of D-Dimer in the blood would get increased.
Hence, this indicates that in the COVID-19 affected patients, there is a formation of several blood clots.
For reducing blood clots and the damage to other organs, certain Allopathy Doctors prescribe more quantity of medicines to the patients which dilutes blood.
As these patients are already affected, CT Scan could not be taken on them. Till the cause for the formation of tumors are diagnosed and till the further test results are disclosed, the Allopathy Doctors use to prescribe these medicines which dilute the blood.
The deficiency in breathing found in the COVID-19 Patients is also found normally in the patients with lungs diseases and persons affected with breathing defects. The blood clot and the tumors formed in the blood vessels of these patients causes severe allergic conditions. Hence the chances of Heart Attack and Paralytic attack are more for these patients.
Safety drugs which are not having any side effect have to be invented successfully on a war footing measure. Only with that process, this dangerous circumstances and the death of these patients could be prevented.
Is this possible in Allopathy medicines? is not known to us. Even if it is possible, Injections for preventing blood clotting such as ‘Heparin Injection’ that are being administered in Allopathy causes dangerous side effects leading even to death.
Besides, the side effects of the medicines prescribed in Allopathy for preventing blood clotting and for diluting the blood and the medicines that are being prescribed for Covid-19 patients have to be scrutinised fully.
It is also to be scrutinised carefully whether Hydroxychloroquine that is being prescribed to Covid-19 patients and the medicines that are being prescribed to Covid-19 patients would cause the danger of excessive blood clot.
Furthermore, RT PCR is being used worldwide to diagnose corona infection, immediately after RT-PCR (Reverse Transcription Polymerase Chain Reaction) Test which confirms the positivity of a Covid Patients, before prescribing Allopathy medicines to those patients, it has to be ascertained whether the quantity of D-DIMER of that patient is in control or in excess.
If the quantity of D-Dimer is excess, the danger of blood clotting and formation of tumor could be diagnosed in advance and the proper medicines could be prescribed. If before administering allopathy medicines, the quantity of D-Dimer is normal, within 5 or 10 days after the administration of such drug, again it has to be tested that the quantity of D-Dimer in blood is normal. By adopting this procedure, it could be notice minutely whether the quantity of D-Dimer increases due to Covid pandemic or the quantity of D-Dimer is increased due to the administration of drugs. This would reduce unexpected deaths, Heart attack and Paralytic attack due to Blood clot.
LIFE SAVING AYURVEDIC MEDICINES:
For preventing blood clotting; if blood is clot, to prevent the consequent heart attack and paralytic attack, in our Ayurvedic Medicine, there are so many safety drugs which are not having any side effect, are there. Considering the welfare of the citizens of this nation, I have enclosed the same along with this representation for your kind perusal and consideration. These medicines could be administered to all the Corona patients which would give proven results.
Arjuna Vati
Arogyavardhini Vati
Ashwagandha
Brahmi Vati
Sarpagandha Ghana Vati
Ksheerabala (101)
WHAT-IS-THE-CAUSE-FOR-THE-DEATH-OF-COVID-19-PATIENTS-converted
கொரோனா-_COVID-19_-நோயாளிகளின்-இறப்பிற்கு-என்ன-காரணம்-Tamil
கொரோனா (COVID-19) நோயாளிகளின் இறப்பிற்கு என்ன காரணம்?- திடீர் மரணங்களை தடுப்பதற்கான வழிமுறைகள்..!
கொரோனா தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வாசனை உணர்வு இழப்பு ஆகியவை பொதுவான அறிகுறிகளாகவும், இந்நோய் தீவிரமடையும்போது நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஆகியவையும் ஏற்படும். இதற்கு என்று வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறி குறைப்பு மற்றும் ஆதரவு சிகிச்சை ஆகியவையே ஆங்கில (Allopathy) மருத்துவத்தில் தற்போதைய நடைமுறையாக உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், இருமும் போதும், தும்மும் போதும் வாயை மூடுவது, முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து விலகி இருப்பது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தொற்றுக்குள்ளான நபர்களைக் கண்காணித்தல் மற்றும் சுய தனிமைப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
முககவசம் அணிவதைவிட; சமூக இடவெளியை கடைப்பிடித்து; தனித்திருப்பது ஒன்றுதான் இந்நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு மிகசிறந்த வழியாகும்.
மனித உடலில் வியப்புக்குரிய விஷயங்கள் நிறையவே நிகழ்கின்றன. இதயம் துடிப்பது, காது கேட்பது, கண் பார்ப்பது, கருத்தரிப்பது, தூக்கம் வருவது, ருசியும் வலியும் தெரிவது… இந்த வரிசையில் உடலில் இயற்கையிலேயே “ரத்தம் உறைவதும்” வியந்து பார்க்கும் விஷயம்தான். இது மட்டும் நிகழாமல் இருந்தால், லேசான காயம் கூட மரணத்தில் முடிந்துவிடும்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ‘ரத்தம் உறைதல்’ என்பது சொல்லிவைத்தது போல் ஒரு சங்கிலி வினையாக நிகழ்கிறது. கிழிபட்ட ரத்தக் குழாயிலிருந்து கொழுப்புப் புரதமும்; பாஸ்போ புரதமும் இணைந்து, ‘திராம்போபிளாஸ்டின்’ (Thromboplastin) எனும் புதுப் புரதமாக மாறுகிறது. இது சில ரத்த உறைவுக் காரணிகளுடன் வினைபுரிந்து, ‘திராம்போகைனேஸ்’ (Thrombokinase) எனும் புரதப் பொருளாக மாறுகிறது.
இந்த நேரத்தில், கல்லீரலில் இருந்து புரோத்ராம்பின் எனும் புரதப்பொருள், ரத்தச் சுற்றோட்டம் வழியாக அடிபட்ட ரத்தக்குழாய்க்கு வருகிறது. அப்போது அங்குள்ள திராம்போகைனேஸ் கால்சியம் தாதுவுடன் இணைந்து செயல்பட்டு, புரோத்திராம்பினை ‘திராம்பின்’ எனும் என்சைமாக மாற்றி விடுகிறது. இது ரத்தத்தில் உள்ள ‘ஃபைப்ரினோஜன்’ (Fibrinogen) எனும் புரதப்பொருளுடன் வினை புரிகிறது. இதன் பலனாக, பிசுபிசுப்பான, நீண்ட ‘ஃபைப்ரின்’ இழைகள் உருவாகின்றன. இவை ஒரு வலைப்பின்னலை உருவாக்குகின்றன. அந்த வலையில் தட்டணுக்கள், ரத்த அணுக்கள், பிளாஸ்மா முதலியவை சிறை பிடிக்கப்படுகின்றன. பின்னர் இந்த வலையமைப்பு சுருங்கி, ஒரு ரத்தக்கட்டியாக உருவாகிறது. ஒழுகும் தண்ணீர்க் குழாயைத் துணி வைத்து அடைப்பதைப் போல, இந்த ரத்தக்கட்டிதான் கிழிபட்ட ரத்தக் குழாயை அடைத்து, ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கிறது.
ரத்த உறைவு என்பது இருமுனைக் கத்தி போன்றது. உடலிலிருந்து வெளியேறும் போது மட்டுமே ரத்தம் உறைய வேண்டும். ரத்தம் உடலில் சுற்றிக்கொண்டிருக்கும்போதே உறைந்துவிட்டால், ரத்த ஓட்டம் தடைபட்டு உடலுக்கும், உயிருக்கும் ஆபத்தாகிவிடும். உதாரணமாக, இதயத் தசைகளுக்கு ரத்தம் கொடுக்கும் கரோனரி தமனி குழாய்களில் ரத்தம் உறைந்துவிட்டால் ‘மாரடைப்பு’ உண்டாகும். மூளைத் தமனிகளில் இது ஏற்பட்டால் பக்கவாதம் வரும்.
‘ரத்தம் உறைதல்’ எனும் இந்த ஆபத்ததான பாதிப்பு கொரோனா (COVID-19) நோயாளிகளுக்கு ஏற்படுவதால்தான் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆம், கொரோனா (COVID-19) பாதிப்புகள் கடுமையாக உள்ள நோயாளிகளின் ரத்த மாதிரிகளில் டி-டைமர் – D-DIMER என்று அழைக்கப்படக் கூடிய புரதத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக ரத்தம் உறையும் அளவு மற்றும் கட்டிகள் உருவாகும் அளவை அளக்க பயன்படும் அலகாக டி-டைமர் – D-DIMER செயல்படும் தன்மை இருந்து வருகிறது. இதன்படி, ரத்தத்தில் மட்டுமின்றி உடலின் எந்த பாகத்தில் இரத்தம் உறைந்து கட்டிகள் உருவாகி இருந்தாலும், இந்த டி-டைமர்- D-DIMER அளவு ரத்ததில் கூடும்.
எனவே, கொரோனா (COVID-19) நோயாளிகளில் கண்டறியப்பட்ட இந்த புரதத்தின் அளவு, இந்த நோயாளிகளின் உடலில் அதிக ரத்தக்கட்டிகள் உருவாகி இருப்பதை உணர்த்துகிறது.
ரத்தம் உறைதல் மற்றும் மற்ற உறுப்புகளின் சேதத்தின் அபாயத்தைக் குறைக்க, சில ஆங்கில (Allopathy) மருத்துவர்கள் கொரோனா (COVID-19) நோயாளிகளுக்கு ரத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் மருந்துகளை அதிக அளவு பரிந்துரை செய்கின்றனர்.
இத்தகைய நோயாளிகள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஸிடி-ஸ்கேன் (computed tomography scan-CT) செய்ய முடியாத நிலைமை உள்ளது. கட்டிகள் உருவாகும் காரணம் கண்டறியப்படும் வரையும், மேலும், அடுத்தக் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரையும், ரத்தம் நீர்த்துப் போகச் செய்யும் மருந்துகளை பரிந்துரைப்பதுதான் தற்போதைய ஒரே வழியாக ஆங்கில (Allopathy) மருத்துவம் இருந்து வருகிறது.
எனவே, கொரோனா (COVID-19) நோயாளிகளில் நாம் காணும் சுவாசக் குறைபாடு பொதுவாக பெரியவர்களுக்கான நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறு சார்ந்த நோய்கள் கொண்டவர்களுக்கு காணும் நிலைமை ஆகும்.
இந்த நோயாளிகளின் சிரை – இரத்தக் குழாய்களில் உண்டாகும் ‘ரத்தம் உறைதல் மற்றும் கட்டிகள் தோன்றுதல்’ என்பது; தீவிரமான மற்றும் மனதிற்கு ஒவ்வாத ஒரு கடுமையான சூழ்நிலை ஆகும். இதனால் இத்தகைய நோயாளிகளுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.
மேலும், கடுமையான பாதிப்புகளை கொண்டுள்ள கொரோனா (COVID-19) நோயாளிகளுக்கு உண்டாகும் அதிக அளவிலான ரத்தம் உறைதல் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான பக்க விளைவுகள் அற்ற; பாதுகாப்பான வழி முறைகளை போர்கால அடிப்படையில் வெற்றிகரமாக கண்டறியப்பட வேண்டும். அப்போதுதான் இந்த ஆபத்தான தன்மையையும்; இத்தகைய நோயாளிகளின் இறப்பையும் நாம் முழுமையாக தடுக்க முடியும்.
இது ஆங்கில (Allopathy) மருத்துவத்தில் உடனடி சாத்தியமா?! என்பது நமக்கு தெரியவில்லை. அப்படியே உடனடி சாத்தியம் என்றாலும், ரத்தம் உறையாமல் தடுக்க பயன்படும் ‘Heparin Injection’ போன்ற ஆங்கில (Allopathy) ஊசி மருந்துகள், மிக மிக கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கி; அதுவே நோயாளிகள் இறப்பதற்கு காரணமாக அமைந்துவிடும்.
மேலும், ரத்தம் உறையாமல் தடுக்க; ரத்தம் நீர்த்துபோகச் செய்ய கொடுக்கப்படும் ஆங்கில (Allopathy) மருந்துகளுக்கும்; கொரோனாவிற்கு கொடுக்கப்படும் ஆங்கில (Allopathy) மருந்துகளுக்கும் இடையான வினைகள் மற்றும் அதன் பக்க விளைவுகள் போன்றவை முழுமையாக ஆராயப்பட வேண்டும்.
ஏற்கனவே, உலகம் முழுவதும் கொரோனா (COVID-19) நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine) மருந்துக்கும்; தற்போது கொரோனாவிற்கு கொடுக்கப்படும் மருந்துகளுக்கும் ரத்தம் உறைதல் அபாயத்தை அதிகரிக்க ஏதேனும் சாத்தியம் உள்ளதா?! என்பதையும் மிக கவனமாக ஆராய வேண்டும்.
மேலும், கொரோனா தொற்றை கண்டறிய உலகம் முழுவதும் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி (RT-PCR -Reverse Transcription Polymerase Chain Reaction) test பயன்படுத்தப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் ‘பாசிட்டிவ்- positive’ என முடிவு வந்தவுடன், அத்தகைய நோயாளிகளுக்கு ஆங்கில (Allopathy) மருந்துகளை கொடுப்பதற்கு முன்பு; அவர்களின் ரத்ததில் ‘டி-டைமர் – D-DIMER’ அளவு சரியாக உள்ளதா?! (அல்லது) கூடுதலாக உள்ளதா?! என்பதை அவசியம் சரிபார்க்க வேண்டும்.
ரத்ததில் ‘டி-டைமர் – D-DIMER’ அளவு கூடுதலாக இருந்தால் ‘ரத்தம் உறைதல் மற்றும் கட்டிகள் தோன்றுதல்’ அபாயம் உள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றவாறு மருந்துகளை கொடுக்கலாம். ஒரு வேளை ஆங்கில (Allopathy) மருந்துகளை கொடுப்பதற்கு முன்பு ரத்ததில் ‘டி-டைமர் – D-DIMER’ அளவு சரியாக இருந்தது என்றால், அத்தகைய கொரோனா நோயாளிகளுக்கு ஆங்கில (Allopathy) மருந்துகளை கொடுத்த 5 முதல் 10 தினங்களுக்குள் மறுபடியும் ரத்ததில் ‘டி-டைமர் – D-DIMER’ அளவு சரியாக உள்ளதா?! என்பதை சரிப்பார்க்க வேண்டும். இப்படி செய்வதின் மூலமாக கொரோனா தொற்றினால் ரத்ததில் ‘டி-டைமர் – D-DIMER’ அளவு அதிகரிக்கின்றதா?! (அல்லது) கொரோனா நோயாளிகள் உட்கொள்ளும் ஆங்கில (Allopathy) மருந்துகளால் ரத்ததில் ‘டி-டைமர் – D-DIMER’ அளவு அதிகரிக்கின்றதா?! என்பதை துல்லியமாக தெரிந்துகொள்வதோடு, ரத்தம் உறைதல் (Blood clotting) காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களையும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளையும் முழுமையாக தடுக்க முடியும்.
உயிர் காக்கும் ஆயுர்வேத மருந்துகள்:
உடலில் ரத்தம் உறையாமல் தடுப்பதற்கும்; ரத்தம் உறைந்தால் அதை சரி செய்வதற்கும் மற்றும் ரத்தம் உறைதல் காரணமாக ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுப்பதற்கும், நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லாத; பாதுகாப்பான மருந்துகள் ஏராளமாக உள்ளன. நாட்டு மக்களின் நலன் கருதி அதை தங்களின் மேலானப் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளேன். இதை கொரோனா நோயாளிகள் உள்பட அனைவருக்கும் கொடுக்கலாம். மிக சிறந்த பலனை அளிக்கும்.
Arjuna Vati
Arogyavardhini Vati
Ashwagandha
Brahmi Vati
Sarpagandha Ghana Vati
Ksheerabala (101)
🌹 வாழ்த்துக்கள் சார் 👏👏👏👏🤝🤝🙏