அயல்நாட்டிற்குப் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்த நாளை; அரசு விழாவாக அறிவித்திருப்பது உண்மையிலுமே மகிழ்ச்சி அளிக்கிறது!

மாமன்னன் இராஜேந்திர சோழன்.

மாமன்னன் இராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.

இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திர சோழன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தி கோயில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகள் அனைத்தும் இவர் ஆட்சி காலத்தில் இருந்தது.

இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன், இராஜராஜ சோழனின் படைகளுக்குப் பொறுப்பேற்று வெற்றியைத் தேடித் தந்தான்.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்த நாளை; இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.08.2021) அறிவித்து இருப்பது உண்மையிலுமே மகிழ்ச்சி அளிக்கிறது.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

கே.பி.சுகுமார்.

Leave a Reply