Union Minister for Road Transport and Highways Shri Nitin Gadkari stressed on the importance of time bound, transparent and fast decision making for Infrastructure development. Addressing CII ‘s annual meeting he said due to collective team spirit and contribution from all the stakeholders, even in the Covid pandemic good results could be achieved. He said though we have a world record of making 38 KMs per day his target is going upto more than 100 KMs per day. The minister said decision has been taken to make Detail Project Reports (DPR) of more than 3 times of the project.
Talking about GPS based tracking system Shri Gadkari said that presentations have been received from international companies and a concrete policy will be made in three months time. He said now within a year it will be possible to go from Delhi to Dehradun in two hours, Delhi to Haridwar in two hours, Delhi to Chandigarh in two hours and within 6 months , it will be Delhi to Jaipur within one and half hours. The Minister said new roads and green connectivity are very important.
xxxxxx
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக குறித்த நேரத்தில், வெளிப்படையான முறையில் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து பங்குதாரர்களின் ஒன்றுபட்ட குழு உணர்வு மற்றும் பங்களிப்பின் காரணமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட நல்ல பலன்களை அடைய முடிந்தது என்றார். ஒரு நாளைக்கு 38 கிலோமீட்டர் எனும் உலக சாதனையை நாம் அடைந்திருந்தாலும், ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் என்பதே இலக்கு என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஜிபிஎஸ் அடிப்படையிலான கண்காணிப்பு முறையை பற்றி பேசிய கட்கரி, சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து விளக்கங்கள் வந்திருப்பதாகவும் மூன்று மாத காலத்தில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். இன்னும் ஒரு வருட காலத்திற்குள் தில்லியிலிருந்து டேராடூனுக்கு இரண்டு மணி நேரத்திலும் தில்லியிலிருந்து ஹரித்துவாருக்கு இரண்டு மணி நேரத்திலும் தில்லியிலிருந்து சண்டிகருக்கு இரண்டு மணி நேரத்திலும் மற்றும் இன்னும் ஆறு மாதங்களில் தில்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ஒன்றரை மணி நேரத்திலும் செல்ல முடியும் என்றார். புதிய சாலைகளும் பசுமை போக்குவரத்தும் மிகவும் முக்கியம் என்று அமைச்சர் கூறினார்.
–எம்.பிரபாகரன்