- Victory flame taken to Narcondam & Barren Islands as part of the sea voyage
- To reach Hut Bay for public viewing
- The flame to be part of Independence Day celebrations at Port Blair
- Next phase of transit to Southern Group of islands from 15th August
The Victory flame of Swarnim Vijay Varsh, commemorating the 50th anniversary celebrations of India’s victory in the 1971 war, travelled through the Andaman & Nicobar Islands chain. Onboard Indian Navy Landing Craft Utility (IN LCU) 58, accompanied by INS Saryu and IN LCU 54, the flame was routed via Narcondam, the Easternmost Island of Andaman & Nicobar Islands. The flame also sailed past the Barren Island, India’s only active volcano. The volcano spewed gas/lava as the flame sailed past the Flat Rock, an islet during low waters.
The victory flame will reach Hut Bay where it will be kept for public viewing and other events under the aegis of Indian Coast Guard. On completion of a day’s public viewing at Hut Bay, the flame will return to Port Blair for the Independence Day parade at Netaji Subhash Chandra Bose Stadium. After the Independence Day celebrations, the flame will begin its next phase of transit to the Southern Group of islands on the evening of August 15, 2021.
1971 ஆம் ஆண்டு போரின் பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வழியாக சென்றது.
1971ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா பெற்ற வெற்றியின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், வெற்றிச் சுடர் நாட்டின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தற்போது இந்த வெற்றி ஜோதி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கடந்து சென்றது.
கடற்படையின் எல்சியு ரக கப்பலில் எடுத்துச் செல்லப்படும் இந்த வெற்றி ஜோதி, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நார்கண்டம் தீவு வழியாக சென்றது. அப்போது ஐஎன்எஸ் சரயு மற்றும் மற்றொரு எல்சியு ரக கப்பல்கள் உடன் சென்றன. எரியும் நிலையில் உள்ள இந்தியாவின் ஒரே எரிமலை அமைந்திருக்கும் பேரன் தீவையும் இந்த வெற்றி ஜோதி கடந்து சென்றது. எரிமலை புகையை வெளியேற்றும் பின்னணியில், வெற்றி ஜோதி கடற்படை கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த வெற்றி ஜோதி, ஹட் வளைகுடாவை சென்றடையும். அது இந்திய கடலோர காவல் படையின் கட்டுப்பாட்டில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். ஹட் வளைகுடாவில் வெற்றி ஜோதியை பொதுமக்கள் பார்வையிட்ட பின், அந்த ஜோதி போர்ட் பிளேர் கொண்டுவரப்பட்டு சுதந்திர தின அணிவகுப்பின்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஸ்டேடியத்தில் வைக்கப்படும்.
சுதந்திர தின கொண்டாட்டத்துக்குப்பின், வெற்றி ஜோதி, தெற்கு பகுதியில் உள்ள தீவுகளுக்கு தனது அடுத்த கட்ட பயணத்தை ஆகஸ்ட் 15ம் தேதி மாலை தொடங்கும்.
–எஸ்.சதிஸ் சர்மா.