Indian contingent for Tokyo Olympics 2020 returned triumphant having registered many firsts for India at the Olympics. This unprecedented feat has given new hope to new India. The Public Broadcaster is happy to share that it has played an inclusive role in making this hope reach every citizen through accessible coverage across India.
While our champions blazed a trail at various Olympic events, Prasar Bharati, through its broadcasting and digital platforms, brought the LIVE spectacle of our Olympic victories to everyone’s household through TV, Radio and Smart phones.
That the accessible coverage on DD Sports and All India Radio Sports network was hugely popular among Indians across age-groups, gender, class and regions is evident in the Multi-Million digital viewership clocked together by multiple YouTube channels and NewsOnAir App of Prasar Bharati.
A quick look at the tall figures:
As a responsible public broadcaster, Prasar Bharati ensures that its accessible coverage not only accounts for taking content to those in remotest areas or with limited means but also making it available for our Specially-abled citizens. For Olympic coverage, Prasar Bharati hired 14 sign language artists who presented 240 hours of Olympics live coverage in sign language. For our Radio audience, 16 All India Radio commentators drew a vivid picture of what was unfolding every second at different Olympic events.
Our Digital coverage of Tokyo Olympics 2020 was exhaustive and multi-faceted. Apart from Live Olympic sporting events, our coverage included live broadcast of Opening and Closing ceremonies, exclusive Virtual Conclave with top Indian sports personalities, biographies and success stories of members of Indian Olympic contingent, celebrations of their victories across the country and much more.
ஒலிம்பிக் போட்டியில், இந்திய குழுவினர் பல முதல் சாதனைகளை படைத்து வெற்றியுடன் திரும்பினர். இதற்கு முன் நடக்காத சாதனை, புதிய இந்தியாவுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த நம்பிக்கை, நாடு முழுவதும் முழுமையான ஒளிபரப்பு மூலம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் சென்றடைய, முக்கிய பங்காற்றியதை பகிர்ந்து கொள்வதில் பிரச்சார் பாரதி மகிழ்ச்சியடைகிறது.
பல ஒலிம்பிக் நிகழ்வுகளில், நமது சாம்பியன்கள் சாதனை படைத்தபோது, பிரச்சார் பாரதி தனது ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம், ஒலிம்பிக் வெற்றியின் நேரடி காட்சிகளை ஒவ்வொரு வீட்டுக்கும் டி.வி, ரேடியோ மற்றும் ஸ்மார்ட் போன்கள் மூலம் கொண்டு சேர்த்தது.
டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் அகில இந்திய வானொலியின் விளையாட்டு நெட்வொர்க் ஆகியவற்றின் ஒளிபரப்பு, இந்தியர்கள் இடையே மிகவும் பிரபலமாக இருந்தது, பிரச்சார் பாரதியின் யூ டியூப் சேனல்கள் மற்றும் நியூஸ் ஆன் ஏர் செயலி ஆகியவற்றில் பதிவான பல மில்லியன் டிஜிட்டல் பார்வையாளர்கள் மூலம் இது தெரிகிறது.
டி.டி. நேஷனல் சேனலில் 14 ஒலிம்பிக் வீடியோக்கள், 6.6 மில்லியன் முறை, 2.6 லட்சம் மணி நேரத்துக்கு பார்க்கப்பட்டுள்ளன.
பிரச்சார் பாரதி விளையாட்டு சேனலில், 74 வீடியோக்கள் 5.8 மில்லியன் முறை 1.4 லட்சம் மணி நேரம் பார்க்கப்பட்டுள்ளன.
பொறுப்புள்ள அரசு ஒளிபரப்பு நிறுவனமாக பிரசார் பாரதி, மிகவும் தொலைதூர பகுதிகளுக்கு ஒலிம்பிக் ஒளிபரப்புகளை கொண்டு சென்றதோடு மட்டும் அல்லாமல், சிறப்பு மாற்றுத்திறனாளிகளுக்கும் கொண்டு சென்றுள்ளது. ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புக்கு, 14 சைகை மொழி கலைஞர்களையும் பிரச்சார் பாரதி பணியில் ஈடுபடுத்தியிருந்தது. அவர்கள் ஒலிம்பிக் நேரடி ஒளிபரப்பை சைகை மொழிகளில் அளித்தனர். நமது வானொலி நேயர்களுக்கு, 16 அகில இந்திய வானொலி வர்ணனையாளர்கள், பல ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நொடியும் விரிவாக விளக்கினர்.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியின், எங்கள் டிஜிட்டல் ஒளிபரப்பு முழுமையானது மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்தது. ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பியதோடு, தொடக்கவிழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள், இந்திய முன்னணி விளையாட்டு வீரர்களுடன் சிறப்பு மெய்நிகர் கருத்தரங்கு, இந்திய ஒலிம்பிக் குழுவினரின் வெற்றிக் கதைகள், நாடு முழுவதும் ஒலிம்பிக் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் உட்பட பலவற்றையும் பிரச்சார் பாரதி ஒளிபரப்பியது.
–திவாஹர்