Air Chief Marshal RKS Bhadauria PVSM AVSM VM ADC, Chief of the Air Staff (CAS) attended the Commanders’ Conference of Maintenance Command at Vayu Sena Nagar, Nagpur on 11 & 12 Aug 21. CAS on arrival was received by Air Marshal Shashiker Choudhary AVSM VSM ADC, AOC-in-C MC.
The two day event was attended by Commanders of Base Repair Depots, Equipment Depots and other Stations/ Units under MC, who reviewed ongoing projects and took stock of goals and tasks for MC in the year ahead.
In his address to the Commanders, CAS noted the pivotal role of MC in meticulous management of the vast and varied inventory of the Indian Air Force. Commending the Command for initiatives launched to meet the evolving needs of a modern and future ready IAF, CAS highlighted the need for building capacity to improve maintainability and operability in complex conditions along with a thrust on active pursuance of indigenised projects.
While highlighting recent events, CAS underscored the importance of due vigilance to meet newer security challenges. He delved on aspects of embracing modern technology such as AI and automation in the task of transformation and re-structuring of IAF to ensure that it is always combat ready.
CAS exhorted the Commanders to imbibe the ‘mantras’ of indigenisation and modernisation in their efforts to ensure that MC remains the fountainhead of maintenance and logistics support to integrated operations in the future.
நாக்பூரில் உள்ள வாயு சேனா நகரில் 2021 ஆகஸ்ட் 11 மற்றும் 12 அன்று நடைபெற்ற பராமரிப்பு பிரிவு தளபதிகளின் மாநாட்டில் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதூரியா கலந்து கொண்டார். பராமரிப்பு பிரிவின் தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் ஷஷிகெர் சவுத்ரி அவரை வரவேற்றார்.
கள செப்பனிடுதல் பணிமனைகள், தளவாட பணிமனைகள் மற்றும் பராமரிப்பு பிரிவின் கீழ் இயங்கும் இதர நிலையங்கள்/மையங்களின் தளபதிகள் இந்த இரண்டு நாள் நிகழ்வில் பங்கேற்றனர். செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் மற்றும் இலக்குகள் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு, எதிர்வரும் வருடத்தில் பராமரிப்பு பிரிவுக்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தளபதிகளிடையே உரையாற்றிய விமானப்படை தளபதி, இந்திய விமானப்படையின் பரந்து விரிந்த வளங்களை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றி வரும் பராமரிப்பு பிரிவை பாராட்டினார். நவீன மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் விளங்கும் இந்திய விமானப்படையின் மாறி வரும் தேவைகளை பூர்த்தி செய்ய பராமரிப்பு பிரிவு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், மேலும் திறன்களை வளர்த்து, பராமரிப்பு பணிகளை மேம்படுத்தி உள்நாட்டு திட்டங்களை துடிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றார்.
–எம்.பிரபாகரன்.