Union Minister for Finance & Corporate Affairs Minister Smt. Nirmala Sitharaman met Rt. Hon Alok Sharma, the COP 26 President Designate, and discussed various issues related to climate change and specifically COP 26 here today.
The Finance Minister stated that India is among a few G20 countries on track towards UNFCCC and Paris Agreement goals and has taken decisive actions to tackle climate change. Smt. Sitharaman mentioned that the Government is taking concrete steps and at appreciable speed to meet its commitments on the target of 450GW of renewable energy by 2030. 100GW of this renewable energy had already been achieved, She added. Among other important initiatives, the extensive work done on Hydrogen Energy Mission was highlighted.
With regards to ongoing discussions on climate change in various fora, Smt. Sitharaman referring to the dialogue on climate justice spoke about the need to bring a sense of compassion towards the poor. The Finance Minister expressed hope that the commitment made by the developed countries to provide $100 billion per year to developing countries would be achieved and was optimistic about a positive outcome on the new collective goals on finance in COP 26.
xxxxxxx
பருவநிலை மாற்றம் குறித்த பல்வேறு விஷயங்கள் மற்றும் குறிப்பாக காப் 26 குறித்து காப் 26 அமைப்பின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள மாண்புமிகு அலோக் சர்மாவுடன் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று உரையாடினார்.
பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு கூட்டம் மற்றும் பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை எட்டுவதில் சரியாக பயணிக்கும் ஒரு சில ஜி20 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கூறிய நிதி அமைச்சர், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முக்கிய முடிவுகளை நாடு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனும் இலக்கை எட்டுவதற்கான வலுவான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். இதில் 100 ஜிகாவாட் ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டது என்று அவர் கூறினார். நீர் மின்சார துறையில் எடுக்கப்பட்டு வரும் விரிவான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
பருவநிலை நீதி குறித்த பேச்சுவார்த்தை குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், ஏழைகள் மீதான பரிவுக்கான தேவை குறித்தும் எடுத்துரைத்தார். வளரும் நாடுகளுக்கு வருடத்திற்கு $100 பில்லியன் வழங்கும் வளர்ந்த நாடுகளின் உறுதி பூர்த்தி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த நிதி அமைச்சர், காப் 26-ல் நிதி மீதான புதிய ஒன்றுபட்ட இலக்குகள் குறித்த நேர்மறை வெளிப்பாடும் ஏற்படும் என்று நம்புவதாக கூறினார்.
–திவாஹர்