765 கிலோவாட் இரட்டை சர்க்யூட் விந்தியாச்சல்-வாரணாசி மின் பகிர்மான தடத்தை பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் நிறுவியுள்ளது. பவர் கிரிட்டின் துணை நிறுவனமான பிவிடிஎஸ்எல் குறித்த காலத்தில் இதற்கான பணிகளை முடித்துள்ளது.
வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையே வலுவான இணைப்பை வழங்க உள்ள இந்த பகிர்மான வட்டம், மின்சார விநியோகம் மற்றும் ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார அமைப்பை வலுப்படுத்தும். வடக்கு பகுதி, மேற்கு பகுதி மற்றும் ஒட்டுமொத்த நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கான மின்சாரம் தடையின்றி கிடைக்க இந்த வழித்தடம் உதவும்.
இந்த வழித்தடம் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் தேசிய தொகுப்பின் மின்சார விநியோக திறன் 4200 மெகாவாட் அளவுக்கு உயர்ந்து, நாட்டின் மொத்த திறன் 110750 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
190 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம், கங்கை, கோபாத், மேயார் மற்றும் சோன் ஆகிய நான்கு ஆறுகளை கடக்கிறது. 92 கிலோமீட்டர் மத்தியப் பிரதேசத்திலும் 98 கிலோமீட்டர் உத்தரப் பிரதேசத்திலும் கடக்கிறது. கட்டண அடிப்படையிலான ஏல முறையின் மூலம் இந்த திட்டத்தை பவர் கிரிட் பெற்றது.
பவர் கிரிட்டிடம் தற்போது 262 துணை மின் நிலையங்களும், 446,940 எம் வி ஏ விநியோக திறனும் உள்ளன. சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளை இந்நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
–திவாஹர்