பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதற்கான தனது உறுதியை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தும் வகையில், பெண்கள் சமவுரிமை தினத்தன்று முதல் அனைத்து மகளிர் பொறியாளர் நிர்வாக பயிற்சி பெறுவோர் பிரிவை பணிக்கு அமர்த்தியதற்கான அறிவிப்பை என்டிபிசி வெளியிட்டுள்ளது.
2021 ஏப்ரலில் இது தொடர்பாக என்டிபிசி வெளியிட்ட விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மின்சாரம், இயந்திரவியல், மின்னணு மற்றும் உபகரணவியல் பிரிவுகளில் கேட் 2021-ல் சிறந்து விளங்கிய பொறியியல் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தில் பெண்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், அனைத்து மகளிர் கட்டுப்பாட்டு அறை ஒன்றை வரும் காலங்களில் உருவாக்க நிறுவனம் உத்தேசித்துள்ளது.
என்டிபிசி பணி வழங்கியுள்ள 50 பேரில், 30 பெண் நிர்வாக பயிற்சி பெறுவோர் 2021 ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 6 வரை நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இந்த சிறப்பு அனைத்து மகளிர் நிர்வாக பயிற்சி பிரிவில் உள்ளோருக்கு சிபட், விந்தியாச்சல், சிம்மாத்ரி ஆகிய இடங்களில் உள்ள என்டிபிசியின் நவீன பயிற்சி மையங்களில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் உணர்வை இளம் பொறியாளர்களிடையே விதைக்கும் வகையில், மூத்த அதிகாரிகள் மற்றும் இதர பணியாளர்களுடன் தொடர்ந்து உரையாடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
–எஸ்.சதிஸ் சர்மா.