சீனாவில் விமான தளத்தை பாதுகாப்பதற்காக சீனா விமானப்படை, சிறப்பு குரங்குகள் படை பிரிவை உருவாக்கியுள்ளது.
பறவைகள் மூலம் விமானங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக குரங்குகள் படை பிரிவு செயல்பட்டு வருகிறது.
விமான நிலையத்தில் விமானங்கள் மேலே செல்லும் போதும், தரையிறங்கும் போதும் தொல்லை ஏற்படுத்தும் பறவைகளை துரத்த குரங்குகளுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
சீனா விமானப்படை தளங்களின் அருகில் உள்ள மரங்களில் இருக்கும் பறவைகளின் கூடுகளை அழிக்கவும், குரங்குகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
விமானப்படை தளங்களில் பறவைகளை கட்டுப்படுத்தவும், பறவைகள் மோதுவதால் ஏற்படும் விமான விபத்துக்களை தவிர்விப்பதற்கும், நவீன தொழில்நுட்பத்தில் எத்தனையோ யுக்திகளை கடைப்பிடித்தும் பயன் அளிக்காதச் சூழ்நிலையில், இந்த குரங்கு படைகளின் செயல்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று சீன விமான படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
-ஆர்.பிரியதர்ஷிணி.