NTPC today joined with Assam Rifles, the oldest paramilitary force of the Indian Army, in their 3000 kms long ‘Freedom Cycling Rally’ as part of “Azadi ka Amrit Mahotsav” celebrations which started from Shillong to New Delhi from 5th Sep 2021. The Rally commemorates 75 years of progressive India and the glorious history of its people, culture, achievements and also promotes the “Fit India Movement”.
NTPC Bongaigaon contingent of more than 20 cyclists headed by Shri Subrata Mandal, ED, NTPC Bongaigaon saw participation of employees from various departments Of the power station who rode more than 18 kms with the Assam Rifles Team. The cyclists carried the flags of NTPC and “Azadi Ka Amrut Mahotsav ‘’ from NH-27 starting from Kashikotra to Kharegaon where the cyclists were felicitated by the senior management of the station.
At the National Highway interjecting Kokrajhar and Bongaigaon, Shri Subrata Mandal, ED, NTPC Bongaigaon, Shri Umesh Singh, GM (FM and Maintenance), Shri H.K. Brahma, Commandant, CISF and senior officials felicitated the jawans headed by Colonel Ajit Khatri and his team of 40 cyclists enroute to Delhi for the noble cause.
விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கிய ஷில்லாங் முதல் புதுதில்லி வரையிலான 3000 கிலோ மீட்டர் “சுதந்திர மிதிவண்டி பேரணியில்” இந்திய ராணுவத்தின் பழமைவாய்ந்த துணை ராணுவப் படையான அசாம் ரைஃபிள்ஸ் உடன் தேசிய அனல் மின் கழகம் இன்று பங்கேற்றது. 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி, அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாறு ஆகியவற்றைக் குறிப்பதுடன், ஃபிட் இந்தியா இயக்கத்தையும் இந்தப் பேரணி ஊக்குவிக்கும்.
பாங்கெய்காவோனில் உள்ள தேசிய அனல் மின் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுப்ரதா மண்டல் தலைமையில் அனல் மின் நிலையத்தின் பல்வேறு துறைகளில் பணி புரியும் 20க்கும் மேற்பட்டோர் அசாம் ரைஃபிள்ஸ் குழுவோடு சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் பேரணியில் கலந்து கொண்டனர். தேசிய அனல் மின் கழகத்தின் கொடி மற்றும் “விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம்” என்ற பதாகைகளை ஏந்தி காஷிகோத்ரா முதல் காரேகாவோன் வரை அவர்கள் பயணம் செய்தனர்.
கோக்ராஜ்ஹர் மற்றும் பாங்கெய்காவோன் இடையே திரு சுப்ரதா மண்டல், நிறுவனத்தின் பொது மேலாளர் உமேஷ் சிங், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தளபதி ஹெச்.கே. பிரம்மா மற்றும் இதர அதிகாரிகள், கர்னல் அஜித் கத்ரி தலைமையிலான 40 வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
–எம்.பிரபாகரன்