The Vice President, Shri M Venkaiah Naidu today said the Centre and States should work in a Team India spirit for the long-term revival of the economy and steer India to greater heights in all spheres.
Speaking at the Platinum Jubilee Celebrations of the Hindustan Chamber of Commerce, he expressed his happiness that the Centre and various States are creating a conducive atmosphere for foreign investment. In the fiscal year 2021, the total FDI inflows stood at US $ 81.72 billion, which is a 10% year-on-year increase, he added.
He also stressed that promoting Public-Private-Partnership in different sectors, including infrastructure, health and education was vital to propel economic growth.
Referring to COVID-19 and its impact, he said that even though the second wave has slowed down the revival, the Indian economy has turned around and is firmly set on the path to recovery. Thanks to a series of timely measures and policy reforms initiated by the government, the economic situation has been improving gradually, Shri Naidu added.
On this occasion, the Vice President appealed to the citizens to get vaccinated for COVID-19, calling it their ‘Pavitra Kartavya’ or responsibility towards their family, community and the nation. He also called upon private players to join the efforts of the government in bringing medical infrastructure and facilities accessible to people in remote and rural areas.
Stating that India stands poised on the cusp of economic transition, he said all indicators point to a long-term phase of growth and recovery in the coming months. Based on different markers, the RBI has retained the growth projection of 9.5 per cent for 2021-22.
Driven by strong macro-economic fundamentals, forward-looking reforms, opening up of FDI and improving the ease of doing business, the Indian economy has the potential to reach the US$ 5 trillion mark in the coming years, the Vice President observed.
Observing that India is blessed with a huge population of educated, talented youth and a vast pool of scientific manpower, Shri Naidu said there has to be a greater focus on creating the right ecosystem for innovation to thrive by enhancing investments in R & D. In this context, he wanted the public sector and the private entities to join hands. He advised bodies like the Hindustan Chamber of Commerce (HCC) to play a proactive role in facilitating such tie-ups.
Shri Naidu suggested that trade bodies and business community should evolve a common code of conduct for their members and weed out black sheep who bring a bad name to the entire corporate and business fraternity.
The Vice President also wanted bodies like Hindustan Chamber of Commerce to take up training and upskilling of youth and ensure that they not only become employable but also are capable of self-employment. “They should be imparted the required skills and knowledge to become job creators rather than job seekers”, he added.
Referring to the recent statement of Tamil Naidu Chief Minister, M K Stalin on the need to rewrite history, the Vice President said that the history of the Indian sub-continent must be rewritten with an Indian perspective and not through a colonial lens.
Lauding the talented, skilled and hardworking people of Tamil Nadu, he said that Tamil Nadu is an attractive place for investments with a stable and investor-friendly government; good connectivity and infrastructure.
Shri Banwarilal Purohit, Hon’ble Governor of Tamil Nadu, Punjab & Administrator of Chandigarh, Shri L. Ganesan, Hon’ble Governor of Manipur, Shri K.K.S.S.R. Ramachandran, Tamil Nadu Minister for Revenue and Disaster Management, Dr Pratap C. Reddy, Founder Chairman, Apollo Group, Shri Ashok R. Thakkar, Chairman, Platinum Jubilee Celebrations, Shri Sathyanarayan R. Dave, President, Hindustan Chamber of Commerce, representatives from the industry and others were present during the event.
Following is the full text of the speech:
“Namaskar..!
I am extremely pleased to be amidst you and share my thoughts with all of you this evening. At the outset, I extend my congratulations to all of you at the Hindustan Chamber of Commerce on your Platinum Jubilee Year, an important milestone in the journey of any organization. My best wishes to the President, Shri Sathyanarayan R. Dave, the team of office bearers and council members.
The fact that the Chamber founded in 1945 by Shri C.M. Kothari and Shri Rai Bahadur Himchand K Shah has now grown into a vast organization with about 1000 members is something all of you can be justifiably proud of. Significantly, members are drawn from various segments of trade and commerce, reflecting the diversity of business activities you represent. Affiliation to the Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI), is an added feather in your cap.
As you all are aware, at the time of Independence, India’s economic policy was largely underpinned by socialistic outlook. But with India’s successful march towards economic and industrial development, the country has embraced liberalization and along with the public sector, the private sector has not only come to play an integral part in our economy but has powered it to greater heights of achievement. I am pleased to know that the Chamber, over the years, has metamorphosed into a dynamic institution and is playing a vital role in improving the economic performance of our country.
Dear Sisters and Brothers,
We are meeting in challenging times in the wake of COVID-19 pandemic, which has caused unprecedented havoc all over the globe, affecting lives and livelihoods. The pandemic has also brought about one of the sharpest economic downturns globally. With the uncertainty expected to persist on the COVID-19 front for some more period, two aspects must be accorded highest priority—vaccinating more people, including children and the need for everyone to strictly adhere to COVID19 protocols—wearing masks all the time, maintaining a safe distance, observing personal hygiene, including frequent washing of hands and avoiding mass gatherings. These measures are absolutely essential to ensure that economy bounces back and the livelihoods of people, particularly from the unorganized sector, day-to-day wage earners, petty vendors and small businesses are protected.
Even though the second wave has slowed down the revival, the Indian economy has turned around and is firmly set on the path to recovery and long-term renewal. Thanks to a series of timely measures and policy reforms initiated by the government, the economic situation has been improving gradually. As you all are aware, the economy grew at a record pace of 20.1% in the first quarter of the fiscal year 2022 in contrast to the contraction of 24.4% witnessed during the same quarter last fiscal. Various reports have indicated a strong rebound in the manufacturing and construction sectors, while the services sector was slightly sluggish. The agriculture sector has been a consistent performer even during the darkest days of the pandemic, thanks to our hardworking farmers and farm labourers. By clocking a growth of 4.5 % in the first quarter as against 3.5% during the same period last year, the Agri sector has once again shown its resilience. Core sectors like fertilizers, cement, steel, coal and refinery products have also shown positive growth.
We now stand poised on the cusp of economic transition and all indicators point to a long-term phase of growth and recovery in the coming months. Based on different markers, the RBI has retained the growth projection of 9.5 per cent for 2021-22. With the easing of various restrictions by the States and phased reopening of the economy, consumer confidence has returned, and market sentiment too has shown a positive trend.
With the lessons learnt during the past 17 months, we are better equipped to deal with the pandemic now. I am sure, everyone from small businesses to big business houses are keen to see their activities return to the pre-pandemic level. All of us need to work in that direction. Driven by strong macro-economic fundamentals, forward-looking reforms, including GST, opening up of FDI, strengthening infrastructure and improving the ease of doing business, the Indian economy has the potential to reach the US$ 5 trillion mark in the coming years. The Centre and all the States should work in a Team India spirit for the long-term revival of the economy and steer India to greater heights in all spheres. I am happy to know that the Centre and various States are creating a conducive atmosphere for foreign investment. In the fiscal year 2021, the total FDI inflows stood at US $ 81.72 billion, which is a 10% year-on-year increase. India is expected to attract FDI of US$ 120-160 billion per year by 2025, according to CII and Ernst & Young report.
As you all are aware, promoting Public-Private-Partnership in different sectors, including infrastructure, health and education is vital to propel economic growth.
Dear sisters and brothers,
Unlike many other nations, India is blessed with a huge population of educated, talented youth and a vast pool of scientific manpower. Technological and scientific innovations will play a key role in driving the economy. There has to be a greater focus on creating the right ecosystem for innovation to thrive by enhancing investments in R & D. In this context, the public sector and the private entities need to join hands and bodies like the Hindustan Chamber of Commerce (HCC) must play a proactive role in facilitating such tie-ups.
Dear sisters and brothers,
Tamil Nadu is an attractive place for investments with a stable and investor-friendly government; good connectivity and infrastructure, talented, skilled and hardworking people. I compliment IIT Madras for becoming the best ranking Indian Institute for the third time in a row in NIRF rankings 2021.
Tamil Nadu has a rich cultural heritage with a hoary past. The carbon dating of some the excavations have thrown fresh light on the ancientness of Thamirabarani civilization, revealing that it was 3,200 years old. We can also see the influence of Tamil Indian culture at Angkor Wat temple in Cambodia, which was built in early 12th century.
I endorse the views of Chief Minister, Thiru M K Stalin that the Indian subcontinent’s history must be rewritten. In fact, it has to be rewritten with an Indian perspective and not through a colonial lens.
I am happy to know that the Chamber has been conducting Entrepreneurship Development Programme for college students. I would also urge the Chamber to facilitate skill development among the youth in a big way. Bodies like yours must take up training and upskilling of youth as one of your leading activities and ensure that youth not only become employable but also are capable of self-employment. They should be imparted the required skills and knowledge to become job creators rather than job seekers.
I am also pleased to note that the Chamber has been working to create and sustain an environment conducive to the growth of the industry in India by partnering with the government through advisory and consultative processes. I am told that it has been working closely with the government on policy issues, enhancing efficiency, and competitiveness and expanding business opportunities for industry through a range of specialized services and global linkages. I am informed that the major emphasis is laid on projecting a positive image of the business, which is essential for investor confidence. I have always been advising industry and commerce bodies like yours to identify and weed out black sheep, who bring a bad name to the entire corporate and business fraternity.
I am pleased to know that Hindustan Chamber also recognizes eminent personalities for their Business Excellence and Contribution to Society with CHAMPION OF HUMANITY AWARDS. It is, therefore, in the fitness of things that it has chosen Prathap C. Reddy Garu, Founder Chairman, Apollo Group, whose career is a saga of service, combined with vision and enterprise.
I am happy to release the Souvenir brought out in connection with the Platinum Jubilee Celebrations containing details of the Chamber’s contribution to trade and industry during the past 75 years.
I wish the Chamber all the very best for its future endeavours!
Jai Hind.”
xxxxxxx
பொருளாதாரத்தின் நீண்டகால மறுமலர்ச்சிக்கு மத்திய அரசும் மாநிலங்களும் இந்திய அணியாக செயல்பட்டு அனைத்து துறைகளிலும் இந்தியாவை மேலும் சிறந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் பவளவிழாக் கொண்டாட்டங்களில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், மத்திய அரசும் பல்வேறு மாநிலங்களும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருவதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 2021 ஆம் நிதியாண்டில், மொத்த அந்நிய நேரடி முதலீடு 81.72 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஆண்டுக்கு 10% அதிகமாகும் என்றும் அவர் கூறினார்.
பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுத்துறை-தனியார் துறை கூட்டை ஊக்குவிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோவிட் -19 மற்றும் அதன் தாக்கத்தை குறிப்பிடுகையில், இரண்டாவது அலை மறுமலர்ச்சியை மெத்தனப்படுத்தினாலும், இந்தியப் பொருளாதாரம் மீண்டுவந்து மீட்புப் பாதையில் உறுதியாக உள்ளது என்றார். அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கு நன்றி; பொருளாதார நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறதுஎன்றும்திரு. நாயுடு கூறினார்.
தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்த அவர், அவ்வாறு செய்வது அவர்களது குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டுக்கு ஆற்றும் ‘புனித செயல்’ என்றார். மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை தொலைதூர மற்றும் கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிடைக்க செய்ய அரசு எடுத்து வரும் முயற்சிகளில் இணையுமாறு தனியார் துறையினரை அவர் கேட்டுக்கொண்டார்.
பொருளாதார மாற்றத்தின் உச்சத்தில் இந்தியா நிற்கிறது என்று கூறிய அவர், அனைத்து குறியீடுகளும் வரவிருக்கும் மாதங்களில் நீண்ட கால வளர்ச்சி மற்றும் மீட்சியைச் சுட்டிக்காட்டுகின்றன. வெவ்வேறு குறியீடுகளின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி 2021-22 ஆம் ஆண்டிற்கான 9.5 சதவிகித வளர்ச்சியை மாற்றமின்றி அப்படியே வைத்துக் கொண்டுள்ளது.
வலுவான மேக்ரோ-பொருளாதார அடிப்படைகள், முன்னோக்கி பார்க்கும் சீர்திருத்தங்கள், அந்நிய நேரடி முதலீட்டைத் திறத்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் திறன் கொண்டதாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் படித்த, திறமையான இளைஞர்கள் அதிகஅளவில் உள்ளனர்; அறிவியல் மனித வளமும் அதிகம் உள்ளது என்று குறிப்பிட்ட திரு. நாயுடு, ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதன் மூலம் புதுமையின் வளர்ச்சிக்கு ஏற்ற சரியான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். இந்த சூழலில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதுபோன்ற கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதை எளிதாக்குவதில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (எச்.சி.சி) போன்ற அமைப்புகள் முனைப்பான பங்கு வகிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
வர்த்தக அமைப்புகளும், வியாபார சமுதாயமும் அவர்களது உறுப்பினர்களுக்கு பொதுவான நடத்தைமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் ஒட்டுமொத்த பெருநிறுவன மற்றும் வர்த்தக சமுதாயத்திற்கு கெட்ட பெயர் உண்டாக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும் என்றும் நாயுடு ஆலோசனை தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல், திறன்மேம்படுத்துதல், அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவது மட்டுமல்லாமல் சுயதொழில் தொடங்கக்கூடிய திறன் கொண்டவர்களாக மாறவும் உறுதிசெய்யும் வண்ணம், ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் போன்ற அமைப்புகள், ஆவன செய்யவேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். “வேலை தேடுபவர்கள் என்பதைவிட வேலையை உருவாக்குபவர்களாக மாறுவதற்கு அவர்களுக்கு தேவையான திறன்களும் அறிவும் வழங்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
வரலாற்றை மாற்றி எழுத வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் சமீபத்திய அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, காலனித்துவ கண்கொண்டல்லாமல் இந்தியக் கண்ணோட்டத்துடன் மாற்றி எழுதப்பட வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டின் திறமையான, திறன் வாய்ந்த கடின உழைப்பாளி மக்களைப் பாராட்டிய அவர், நிலையான, முதலீட்டாளருக்கு சாதகமான அரசாங்கத்துடன், நல்ல இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன், முதலீடு செய்வதற்கு கவர்ச்சிகரமான இடமாக தமிழ்நாடு உள்ளது என்றார் அவர்.
சென்னையில் இன்று நடைபெற்ற இந்துஸ்தான் வர்த்தக சபையின் பிளாட்டினம் விழாவில் மாண்புமிகு குடியரசு துணைத்தலைவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
வணக்கம்..!
இன்று மாலை உங்களிடையே இருப்பதிலும், என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், முதலில், ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் பவள விழா ஆண்டில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எந்தவொரு நிறுவனத்தின் பயணத்திலும் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். தலைவர், சத்யநாராயணன் ஆர். தவே, அலுவலகப் பொறுப்பாளர்கள், குழுவின்மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
1945 ஆம் ஆண்டில் திரு சி.எம். கோத்தாரி மற்றும் திரு ராய் பகதூர் ஹிம்சந்த் கே ஷா ஆகியோரால் நிறுவப்பட்ட சேம்பர், இப்போது சுமார் 1000 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பரந்த அமைப்பாக வளர்ந்துள்ளது, நீங்கள் அனைவரும் இது பெருமைப்படக்கூடிய விஷயமாகும். குறிப்பிடத்தக்க வகையில், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வணிக நடவடிக்கைகளின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் விதமாக, வணிகம் மற்றும் வர்த்தகத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து உறுப்பினர்கள் எடுக்கப்படுகிறார்கள். இந்தியத் தொழில் வர்த்தக சம்மேளனத்தின் (எஃப் ஐ சி சி ஐ) (FICCI) கூட்டமைப்பு, உங்கள் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
நீங்கள் அனைவரும் அறிந்தபடி, விடுதலைக் காலத்தின் போது, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை பெரும்பாலும் சோசலிசக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது. ஆனால் பொருளாதார, தொழில்துறை வளர்ச்சியை நோக்கி இந்தியா வெற்றிகரமாகமுன்னேறியதுடன், நாடு தாராளமயமாக்கலை ஏற்றுக்கொண்டது. பொதுத்துறையுடன் சேர்ந்து, தனியார் துறையும் நமது பொருளாதாரத்தில் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிப்பது மட்டுமல்லாமல், அதை அதிக உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. சேம்பர், பல ஆண்டுகளாக, மாற்றங்கள் கொண்ட நிறுவனமாக உருமாறி, நம் நாட்டின் பொருளாதார, செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
கோவிட் -19 பெருந்தொற்றுநோயையடுத்து நாம் சவாலான காலங்களைச் சந்தித்து வருகிறோம், இது உலகம் முழுவதும் முன்னெப்போதுமில்லாத வகையில் பேரழிவை ஏற்படுத்தி, வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் பாதித்துள்ளது. பெருந்தொற்றுநோய் உலக அளவில் கூர்மையான பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் -19 பொருத்த வரை இன்னும் சில காலங்களுக்கு நிச்சயமற்ற தன்மை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டு அம்சங்களுக்கு – குழந்தைகள் உட்பட அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் அனைவரும் கண்டிப்பாக கோவிட் -19 நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றுக்கு – உயர் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எப்போதும் முகக்கவசம் அணிதல், பாதுகாப்பான இடைவெளியைப்பராமரித்தல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், கூட்டங்களைத் தவிர்ப்பது உட்பட தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடித்தல் ஆகியவை மிகவும் முக்கியம்.
பொருளாதாரம் மீண்டெழவும், மக்களின் வாழ்வாதாரம் – குறிப்பாக ஒழுங்கமைக்கப்படாத துறையினர், தினக்கூலிகள், சிறு விற்பனையாளர்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.
இரண்டாவது அலை மறுமலர்ச்சியைக் மந்தப்படுத்தியிருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் திரும்ப வந்துள்ளது. மீட்புக்கும் நீண்டகால புதுப்பிப்புக்குமான பாதையில் உறுதியாக உள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கொள்கை சீர்திருத்தங்களுக்கு நன்றி. பொருளாதார நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறது. நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 24.4% என்று சுருங்கியதற்கு மாறாக, 2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் 20.1% என்ற சாதனைவேகத்தில் வளர்ந்தது. பல்வேறு அறிக்கைகள் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் வலுவான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன, அதே நேரத்தில் சேவைத் துறை சற்று மந்தமாக இருந்தது. பெருந்தொற்றுநோயின் இருண்ட காலங்களிலும் வேளாண் துறை தொடர்ந்து செயலாற்றி வந்தது. கடின உழைப்பாளிகளான நமது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நன்றி. முதல் காலாண்டில் 4.5 % வளர்ச்சியை அடைந்ததன் மூலம், (கடந்த ஆண்டு இதே காலத்தில் 3.5 % ஆக இருந்தது), வேளாண் துறை எந்தச் சூழலிலும் செயலாற்றக் கூடிய நெகிழ்தன்மை கொண்டது என்பதைக் காட்டியது. உரங்கள், சிமெண்ட், எஃகு, நிலக்கரி மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள் போன்ற முக்கிய துறைகளும் நேர்மறையான வளர்ச்சியைக் காண்பித்துள்ளன.
நாம் இப்போது பொருளாதார மாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறோம், அனைத்து குறியீடுகளும் வரவிருக்கும் மாதங்களில் நீண்ட கால வளர்ச்சி மற்றும் மீட்சியைச் சுட்டிக்காட்டுகின்றன. வெவ்வேறு குறியீடுகளின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி 2021-22 ஆம் ஆண்டிற்கான 9.5 சதவிகித வளர்ச்சியை மாற்றமின்றி அப்படியே வைத்துக் கொண்டுள்ளது. மாநிலங்களால் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரத்தைக் கட்டங்கட்டமாக மீண்டும் திறப்பதன் மூலம், நுகர்வோர் நம்பிக்கை திரும்பியுள்ளது, சந்தை உணர்வும் நேர்மறையான போக்கைக் காட்டியுள்ளது.
கடந்த 17 மாதங்களில் கற்றுக்கொண்ட பாடங்களால், இப்போது பெருந்தொற்றுநோயை மேலும் திறம்பட சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோம். சிறு வணிகங்கள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைவரும் தங்கள் நடவடிக்கைகள் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதில் ஆர்வமாக உள்ளனர் என நான் உறுதியாக நம்புகிறேன். நாம் அனைவரும் அந்தத் திசையில் செயல்பட வேண்டும். வலுவான மேக்ரோ-பொருளாதார அடிப்படைகள், முன்னோக்கி பார்க்கும் சீர்திருத்தங்கள், ஜி எஸ் டி, அந்நிய நேரடி முதலீட்டைத் திறத்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்ஆற்றல் கொண்டதாக உள்ளது.
பொருளாதாரத்தின் நீண்டகால மறுமலர்ச்சிக்கு மத்திய அரசும் மாநிலங்களும் இந்திய அணியாக செயல்பட்டு அனைத்து துறைகளிலும் இந்தியாவை மேலும் சிறந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மத்திய அரசும் பல்வேறு மாநிலங்களும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். 2021 ஆம் நிதியாண்டில், மொத்த அந்நிய நேரடி முதலீடு 81.72 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஆண்டுக்கு 10% அதிகமாகும்.சிஐஐ மற்றும் எர்ன்ஸ்ட் & யங் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா, ஆண்டுக்கு 120-160 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நேரடி அந்நிய முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல, உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுத்துறை -தனியார்துறை-கூட்டை ஊக்குவிப்பது, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு இன்றியமையாதது.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
மற்ற பல நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் படித்த, திறமையான இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர்; அறிவியல் மனிதவளமும் அதிகம் உள்ளது. தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
ஆராய்ச்சி, வளர்ச்சிப்பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதன் மூலம் புதுமையின் வளர்ச்சிக்கு ஏற்ற சரியான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சூழலில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதுபோன்ற கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதை எளிதாக்குவதில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (எச்.சி.சி) போன்ற அமைப்புகள் முனைப்பான பங்கு வகிக்க வேண்டும்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
நிலையான,முதலீட்டாளருக்கு சாதகமான அரசாங்கம்; நல்ல இணைப்பு, உள்கட்டமைப்பு வசதிகள்; திறமையான, திறன் வாய்ந்த கடின உழைப்பாளிகள் ஆகியவற்றுடன், முதலீடு செய்வதற்கு கவர்ச்சிகரமான இடமாக, தமிழ்நாடு திகழ்கிறது.
என்ஐஆர்எஃப் தரவரிசை 2021 இல் மூன்றாவது முறையாக சிறந்த தரவரிசை கொண்ட இந்திய கல்வி நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐஐடி மெட்ராஸ் கல்வியமைப்புக்கு எனது பாராட்டுக்கள்.
தமிழ்நாடு மிகப் பண்டைய காலத்திலிருந்து சிறந்து விளங்கும் ஒரு வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. சில அகழ்வாராய்ச்சிப் பொருட்களின் கார்பன் டேட்டிங் காலத்தை அறியும் ஆய்வு, தாமிரபரணி நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என்பதை வெளிப்படுத்தி அதன் தொன்மையின் மீது புத்தொளி பாய்ச்சியுள்ளது. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலில் தமிழ் இந்திய கலாச்சாரத்தின் தாக்கத்தை நாம் காணலாம்
இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என்ற முதல்வர் திரு எம் கே ஸ்டாலினின் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். உண்மையில், இது காலனித்துவ கண் கொண்டல்லாமல் இந்தியக் கண்ணோட்டத்துடன் மாற்றி எழுதப்பட வேண்டும்
கல்லூரி மாணவர்களுக்காக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை சேம்பர் நடத்தி வருவதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இளைஞர்களிடையே திறன் மேம்பாட்டை பெரிதும் வளர்க்குமாறு நான் சேம்பரைக்கேட்டுக்கொள்கிறேன். உங்களைப் போன்ற அமைப்புகள், உங்கள் முன்னணி நடவடிக்கைகளில் ஒன்றாக இளைஞர்களின் பயிற்சியையும், திறன் மேம்படுத்துதலையும் எடுத்துக்கொள்ள வேண்டும்; இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவது மட்டுமல்லாமல் சுயதொழில் செய்யக்கூடியவர்களாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வேலை தேடுவோர் என்பதை விட வேலையை உருவாக்குபவர்களாக மாறுவதற்கு அவர்களுக்குத் தேவையான திறன்களையும் அறிவையும் வழங்க வேண்டும்.
ஆலோசனை மற்றும் ஆலோசனை செயல்முறைகள் மூலம் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து, இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு உகந்த ஒரு சூழலை உருவாக்கவும் , பராமரிக்கவும் சேம்பர் செயல்பட்டு வருகிறது என்பதையறிந்தும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கொள்கை தொடர்பான விஷயங்கள், செயல்திறன் மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துதல்; பல்வேறு சிறப்பு சேவைகள் மற்றும் உலகளாவிய இணைப்புகள் மூலம் தொழில்துறைக்கான வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் அது அரசாங்கத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.
முதலீட்டாளர் நம்பிக்கைக்கு அவசியமான வணிகத்தின் நேர்மறையான பிம்பத்தை முன்னிறுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களைப் போன்ற, தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள், ஒட்டுமொத்த கார்ப்பரேட் மற்றும் வணிக சமூகத்திற்கு கெட்ட பெயரைக் கொண்டு வரும் கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும் என நான் எப்போதும் அறிவுறுத்தி வருகிறேன்.
ஹிந்துஸ்தான் சேம்பர், வணிகத்தில் சிறந்து விளங்குவதற்காகவும், சமூகத்திற்காற்றும் பங்களிப்பிற்காகவும் சிறந்த ஆளுமைகளை “சாம்பியன் ஆஃப் ஹியூமானிடி” விருது வழங்கி கௌரவிக்கிறது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். எனவே, அப்பல்லோ குழுமத்தின் நிறுவனர் தலைவர் பிரதாப் சி.ரெட்டி அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது மிகவும் பொருத்தமே. அவருடைய பணி தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய சாதனைசேவையாகும்.
கடந்த 75 ஆண்டுகளில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சேம்பரின் பங்களிப்பு பற்றிய விவரங்கள் அடங்கிய பவள விழா கொண்டாட்டங்கள் தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட விழாமலரை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சேம்பரின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்!
ஜெய் ஹிந்த்.
–எம்.பிரபாகரன்