The Prime Minister, Shri Narendra Modi interacted with healthcare workers and beneficiaries of the COVID vaccination programme in Goa through a video conference on the completion of 100% first dose coverage for the adult population in Goa.
Interaction with healthcare workers and beneficiaries
During the interaction, the Prime Minister enquired from Dr Nitin Dhupdale, Lecturer in Goa Medical College, how he convinced people to take COVID vaccines. He also discussed the difference between the COVID vaccination campaign and the earlier campaign. Dr Dhupdale praised the mission campaign mode of this particular campaign. Criticizing the opposition party, PM wondered how after vaccinating 2.5 crore people there were reactions from the opposition party instead of the vaccinated people. The Prime Minister lauded doctors and other Corona warriors for the completion of 100% first dose coverage for the adult population in Goa. He said that this is an inspiration for the entire world.
Prime Minister while interacting with the COVID beneficiary and activist Shri Nazir Shaikh enquired how he decided to convince others to take the vaccines. He asked Shri Nazir about the difficulties faced by him in taking people to the vaccination centres. He also asked Shri Nazir about his experience in the vaccination drive. The Prime Minister said that the inclusion of ‘Sabka Prayas’ like Shri Nazir Shaikh’s effort is a big factor in achieving results in this very important campaign. The Prime Minister praised the socially conscious activists all over the country.
While interacting with Ms Sweema Fernandes, the Prime Minister asked what all enquiries she made while people came to her for vaccination. She explained the stages of maintaining the cold chain. He also enquired how they maintained the cold chain for the vaccines. He inquired about the steps taken by them to achieve zero wastage of vaccines. The Prime Minister praised her for doing her duties despite her family commitments and thanked all the families of the corona warriors for their efforts.
While interacting with Shri Shashikant Bhagat, the Prime Minister recalled how he interacted with his old acquaintance on his birthday yesterday. He narrated that when asked about his age, the Prime Minister said ‘Abhi 30 baaki hain’ (30 more to go). Shri Modi advised 75-year-old Shri Bhagat not to dwell on 75 years but should focus on 25 years to come. He enquired about any difficulties faced by him during vaccination. Shri Bhagat expressed his satisfaction with the preference given to the senior citizens. He also dispelled the fears of the side effects of vaccines, as he is a diabetic and did not face any side effects. The Prime Minister praised Shri Bhagat, a retired sales tax officer for his social service and said that the government is committed to enhancing the ease of living including in the sphere of taxation.
The Prime Minister enquired Ms Sweety SM Vengurlekar how she organized Tikka Utsav in remote areas. He asked about the planning that went into organizing the Utsav. The Prime Minister emphasized that the focus was on making it easy for the citizens during the pandemic as far as possible. He asked for proper documentation and dissemination of the logistics involved in such a massive exercise.
The Prime Minister enquired visually challenged beneficiary Ms Sumera Khan about her experience of vaccination. The Prime Minister praised Ms Khan for her achievements in academics and wished her well for her aspirations of becoming an IAS officer. Shri Modi lauded the Divyang citizens of the country for inspiring the lives that they are leading.
Speech of the Prime Minister
Addressing the gathering, the Prime Minister lauded the people of Goa for achieving Anant Sutr’ (Protection) during the auspicious Ganesh Utsav season. He expressed happiness for every eligible person in Goa getting at least one dose of the vaccine. “This is a major milestone in the fight against Corona. Every achievement of Goa that epitomises the concept of El Bharat -Shreshth Bharat fills me with great joy”, he said.
The Prime Minister remembered the services of Shri Manohar Parikkar on this day of major achievements.
The Prime Minister remarked that in the last few months, Goa has fought bravely with natural calamities like heavy rains, cyclones, floods. He praised all the corona warriors, health workers and Team Goa for maintaining the pace of corona vaccination amidst these natural calamities.
The Prime Minister commended the kind of coordination that Goa has shown in dealing with social and geographical challenges. The pace of vaccination in Canacona sub-division, which is located in the remotest parts of the state, sets an example for the rest of the state. “Goa has shown the great results of ‘Sabka Saath, Sabka Vikas, Sabka, Vishwas and Sabka Prayas.” he said.
The Prime Minister struck an emotional chord and said that I have seen many birthdays and have always been indifferent to that but, in all my years, yesterday was a day that made me deeply emotional.” Yesterday’s occasion was made extra special by the efforts of the country and corona warriors. He praised the compassion, service and sense of duty of the team and people for vaccinating 2.5 crore people. “Everyone cooperated fully, people connected this with service. It was their compassion and duty that made this feat of 2.5 crore vaccination in a day possible,” said a visibly moved Prime Minister.
The Prime Minister praised the contribution of the people of the medical field, those who are engaged for the last two years, without caring for their lives, are helping the countrymen in fighting Corona, for the record vaccination yesterday. People associate it with service. It is his compassion and duty that has been able to administer 2.5 crore vaccine doses. The Prime Minister informed that Himachal, Goa, Chandigarh and Lakshadweep have completed the first dose for the eligible population. Sikkim, Andaman Nicobar, Kerala, Laddakh, Uttrakhand and Dadra Nagar haveli are not far behind.
The Prime Minister said that India prioritized tourist destinations in its vaccination efforts though this was not talked about earlier. It was important for our tourism destinations to open. The Central government has also recently taken several steps to encourage foreign tourists. It has been decided to give free visas to 5 lakh tourists visiting India, loan up to 10 lakh with a government guarantee to the stakeholders in the tourism sector and loan up to 1 lakh for registered tourist guides have been instituted, the Prime Minister informed.
The Prime Minister said that the ‘double engine government’ is powering the efforts of making the Goan tourism sector more attractive and giving more facilities to farmers and fishermen of the state. Mopa greenfield airport and 6 lane highway with the allocation of 12 thousand crore, Zuari bridge connecting North and South Goa to be inaugurated in few months are enhancing connectivity in the state.
Shri Modi noted that Goa has taken a pledge of Swayam Poorna Goa to attain AatmNirbharta in Amrit Kaal and has started manufacturing more than 50 components. He underlined Goa’s achievements in toilet coverage, cent per cent electrification, and the great effort for ‘Har Ghar Jal’ campaign. The country has connected 5 crore households with piped water in 2 years and Goa’s efforts in this direction show the state’s clear priority for good governance and ease of living. The Prime Minister also listed Goa’s efforts in providing ration to poor families, free gas cylinder, distribution of PM Kisan Samman Nidhi, expansion of Kisan Credit Cards in mission mode during pandemic and Svanidhi scheme benefits to street vendors. Calling Goa a state of boundless possibilities, the Prime Minister said “Goa is not just a state of the country but also is a strong marker of Brand India”.
கோவாவில் வயது வந்தோர் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை அடுத்து, பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி காணொலி மூலம் கலந்துரையாடினார்.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் கலந்துரையாடல்
இந்தக் கலந்துரையாடலின் போது, கோவா மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் நிதின் துப்தாலேவிடம், கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு மக்களை எப்படி ஒப்புக்கொள்ள வைத்தீர்கள் என்று பிரதமர் கேட்டார். முந்தைய பிரச்சாரம், கோவிட் தடுப்பூசி பிரச்சாரம் ஆகியவற்றுக்கு என்ன வேறுபாடு என்பது குறித்தும் அவர் விவாதித்தார். துப்தாலே இந்த பிரச்சாரத்தின் தீவிரம் குறித்து பாராட்டினார். எதிர்க்கட்சியை விமர்சித்த பிரதமர், 2.5 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும், எதிர்க்கட்சியிடம் இருந்து விமர்சனங்கள் வருவது குறித்து பிரதமர் வியப்பு தெரிவித்தார். கோவாவில் வயது வந்தோர் 100 சதவீத அளவுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்காக மருத்துவர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களை பிரதமர் பாராட்டினார். உலகம் முழுவதற்கும் இது முன்மாதிரியாக இருக்கும் என அவர் கூறினார்.
கோவிட் பயனாளியும், ஆர்வலருமான திரு நஸீர் ஷேக்- உடன் கலந்துரையாடிய பிரதமர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மற்றவர்களை எப்படி ஒப்புக்கொள்ள வைத்தீர்கள் என்று விசாரித்தார். தடுப்பூசி மையங்களுக்கு மக்களை அழைத்து வருவதில் திரு. நஸீர் எதிர்கொண்ட சிரமங்கள் என்ன என்றும் அவர் கேட்டறிந்தார். தடுப்பூசி இயக்கம் குறித்த அனுபவங்கள் குறித்தும் திரு நஸீரிடம் அவர் கேட்டார். சப்கா பிரயாஸ் சேர்ப்பு குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்த முக்கியமான பிரச்சாரம் சாதனை படைத்துள்ளதற்கு திரு நஸீர் ஷேக்கின் முயற்சி மிகப் பெரிய அம்சம் என்று குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள சமூக உணர்வு கொண்ட ஆர்வலர்களை பிரதமர் பாராட்டினார்.
திருமதி ஸ்வீமா பெர்ணான்டஸ் உடன் கலந்துரையாடிய போது, மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும்போது என்னென்ன விசாரிப்பீர்கள் என்று பிரதமர் கேட்டார். அவர் தடுப்பூசியை சரியான வெப்பநிலையில் பராமரிப்பது பற்றி விளக்கினார். தடுப்பூசிகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பதை அவர் கேட்டறிந்தார். தடுப்பூசிகள் சிறிது கூட வீணாகாமல் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பது பற்றியும் அவர் விசாரித்தார். குடும்ப சிரமங்களுக்கு இடையே கடமையைச் செய்துவரும் அவரை பிரதமர் பாராட்டியதுடன், அனைத்து முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
திரு. சசிகாந்த் பகத்துடன் கலந்துரையாடிய போது, நேற்று தமது பிறந்தநாளின் போது,பழைய நண்பருடன் கலந்துரையாடியதை நினைவு கூர்ந்தார். அவரது வயதை கேட்டபோது, இன்னும் 30 ஆண்டுகள் உள்ளதாக கூறியதை பிரதமர் விவரித்தார். 75 வயது பகத், சென்றதை மறந்து, அடுத்த 25ஆண்டுகள் பற்றி கவனம் செலுத்துமாறு திரு மோடி அறிவுரை கூறினார். தடுப்பூசி போட்டுக் கொண்டபோது ஏதேனும் சிரமம் ஏற்பட்டதா என அவர் விசாரித்தார். மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது பற்றி திரு பகத் திருப்தி தெரிவித்தார். தான் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்த போதிலும், தனக்கு எந்தப் பக்க விளைவும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், பக்க விளைவுகள் குறித்த அச்சத்தை அகற்றினார். ஓய்வு பெற்ற விற்பனை வரி அதிகாரியான திரு பகத்தின் சமூக சேவையை பிரதமர் பாராட்டினார். வரி விதிப்பு உள்ளிட்ட வளையத்தில் சிரமமின்றி வாழ்வதை உறுதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதைக் குறிப்பிட்டார்.
ஸ்வீட்டி வெங்குர்லேக்கர் தொலைதூரப் பகுதிகளில் எவ்வாறு டிக்கா உத்சவை ஏற்பாடு செய்தார் என பிரதமர் வினவினார். உத்சவ் குறித்த திட்டமிடல் பற்றி அவர் கேட்டறிந்தார். பெருந்தொற்று காலத்தில் மக்கள் மீது கவனம் செலுத்துவது இதனை எளிதாக்கும் என பிரதமர் தெரிவித்தார். இந்தப் பெரும் நடைமுறையில் முறையான ஆவணங்கள், போக்குவரத்து பரவல் ஆகியவை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
பார்வையற்ற பயனாளி சுமேரா கானிடம், தடுப்பூசி குறித்த அனுபவத்தை பிரதமர் விசாரித்தார். அவரது கல்வி சாதனைகள் பற்றி பாராட்டிய பிரதமர், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற அவரது விருப்பத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். உடல் குறைபாடு உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக திரு மோடி புகழ்ந்துரைத்தார்.
பிரதமரின் உரை
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், புனிதமான கணேச உத்சவ் பருவத்தில், பாதுகாப்பு பெற்ற கோவா மக்களைப் பெரிதும் பாராட்டினார். கோவாவில் தகுதியுள்ள மக்கள் அனைவரும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார். ‘’ கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு பெரிய மைல்கல் ஆகும். கோவாவின் ஒவ்வொரு சாதனையும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்னும் கருத்தைப் பறைசாற்றுவது என்னை மகிழ்ச்சியால் நிறைத்துள்ளது’’ என்றார் அவர்.
இந்தப் பெரும் சாதனை தினத்தில் திரு மனோகர் பாரிக்கரின் சேவைகளை பிரதமர் நினைவுகூர்ந்தார்.
கடந்த சில மாதங்களில், பலத்த மழை, புயல்கள், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்த்து கோவா துணிச்சலுடன் போராடியதாக பிரதமர் குறிப்பிட்டார். அனைத்து கொரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், இந்த இயற்கைப் பேரிடருக்கு இடையிலும், கொரோனா தடுப்பூசி வேகத்தைப் பராமரித்த கோவா குழுவினரை அவர் புகழ்ந்து பாராட்டினார்.
சமூக, புவியியல் சவால்களைச் சமாளிப்பதில் கோவா காட்டிய ஒருங்கிணைப்பை பிரதமர் பாராட்டினார். மாநிலத்தின் தொலைதூரத்தில் உள்ள கோனாகோனா உப பிரிவில், தடுப்பூசி செலுத்தும் வேகம், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு முன்னுதாரணமாக இருந்தது. ‘’ சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்-ன் பயன்களை கோவா காட்டியுள்ளது’’ என அவர் தெரிவித்தார்.
நான் பல பிறந்த நாள்களைப் பார்த்திருக்கிறேன். நான் எப்போதும் அவற்றை லட்சியம் செய்வதில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளிலும், நேற்றைய தினம் என்னை பெரிதும் உணர்ச்சிவசப்பட வைத்து விட்டது என்று உணர்வுபூர்வமாக பிரதமர் குறிப்பிட்டார். நேற்றைய நிகழ்வு, நாட்டின் முயற்சிகள் மற்றும் கொரோனா வாரியர்களுக்கு கூடுதல் சிறப்பை அளித்துள்ளது. 2.5 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர்களின் கருணை, சேவை, கடமை உணர்வு ஆகியவற்றை அவர் பாராட்டினார். ‘’ இதனுடன் தொடர்புள்ள அனைவரும் சேவை மனப்பான்மையுடன் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இது அவர்களது கருணை, கடமை காரணமாக ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது ‘’, என உணர்ச்சிப் பெருக்குடன் பிரதமர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல், நாட்டு மக்களுக்கு உதவுவதில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறை மக்களின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர், அவர்களால்தான் நேற்று இது சாத்தியமானதாக கூறினார். சேவை உணர்வு கொண்ட மக்களின் கருணை மற்றும் கடமை உணர்வால், 2.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிந்துள்ளது. இமாச்சலம், கோவா, சண்டிகர், லட்சத்தீவுகள் ஆகியவை தகுதியுள்ளோருக்கு 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். சிக்கிம், அந்தமான் நிக்கோபார், கேரளா, லடாக், உத்தரகாண்ட், தாத்ரா நாகர் ஹவேலி ஆகியவை இந்த சாதனைக்கு பக்கத்தில் உள்ளன.
இந்தியா தனது சுற்றுலா தளங்களில் தடுப்பூசி முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இது பற்றி இதுவரை வெளியில் பேசப்படவில்லை. நமது சுற்றுலா இடங்கள் திறக்கப்படுவது முக்கியமாகும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அண்மையில் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்குதல், சுற்றுலா துறையுடன் தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு அரசின் உத்தரவாதத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வசதி, பதிவு பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
இரட்டை எஞ்சின் அரசு, கோவா சுற்றுலா துறையை மேலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் ஆற்றல் மிக்கதாக மாற்றியுள்ளதாக கூறிய பிரதமர், மாநிலத்தின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அதிக வசதிகளை அளித்துள்ளதாக குறிப்பிட்டார். மோபா கிரீன்பீல்டு விமான நிலையம், ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் 6 வழிச்சாலை, அடுத்த சில மாதங்களில் திறக்கப்படவுள்ள வடக்கு, தெற்கு கோவாவை இணைக்கும் சுவாரி பாலம் ஆகியவை மாநிலத்தின் இணைப்பு தொடர்பை அதிகரித்து வருகின்றன.
அம்ரித் கால் தன்னிறைவை அடைய சுயம் பூர்ண கோவா என்ற உறுதியை கோவா எடுத்துக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய திரு மோடி, 50-க்கும் மேற்பட்ட பாகங்களின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். கழிப்பறை வசதி, முழுமையான மின்சாரமயமாக்கல், வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கும் பெரு முயற்சி ஆகிய கோவாவின் சாதனைகளை அவர் பட்டியலிட்டார். நாட்டில் இரண்டு ஆண்டுகளில் 5 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கோவா மேற்கொண்ட முயற்சிகள், சிறந்த நிர்வாகத்துக்கான தெளிவான முன்னுரிமையைக் காட்டுகிறது.
ஏழை குடும்பங்களுக்கு ரேசன் வழங்குதல், இலவச எரிவாயு சிலிண்டர், பிரதமர் சம்மான் நிதி விநியோகம், பெருந்தொற்று காலத்திலும் கிசான் கடன் அட்டைகள் விரிவாக்கம், தெருவோர வியாபாரிகளுக்கு ஸ்வநிதி வழங்கல் போன்ற கோவா மாநிலத்தின் முயற்சிகளை பிரதமர் பட்டியலிட்டார். எல்லையற்ற வாய்ப்புகளின் மாநிலம் கோவா என்று கூறிய பிரதமர், ‘’ கோவா நாட்டின் வெறும் மாநிலம் மட்டுமல்ல, இந்தியா முத்திரையின் வலுவான அடையாளம்’’ என்று கூறினார்.
–திவாஹர்