நீர் வழி தடங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றால்; அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்!- இதற்கான உத்தரவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே பிறப்பிக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மணலி மண்டலம், ஆமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயில், நீர்வள ஆதார துறை சார்பில் நடைபெற்றுவரும் ஆகாய தாமரை மற்றும் நீர் தாவரங்களை அகற்றும் பணிகளையும், தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூர் கால்வாயில் தேங்கியுள்ள சேறு, சகதி, ஆகாயதாமரை மற்றும் மிதக்கும் தாவரங்களை ரொபாடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணிகளையும், மாதவரம் மண்டலம் பிரிட்டானியா நகர், கலெக்டர் நகர், செந்தில் நகர், வேலம்மாள் நகர், ஐஎன்டியூசி நகர், பிர்லா அவென்யூ, ராசி நகரில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் 31 கி.மீட்டருக்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், மழைநீரை அகற்றும் வெள்ள தடுப்பு பணிக்காக, ஓட்டேரி நல்லா கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை மிதவை இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.09.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள ஆறு, ஏரி, கால்வாய், குளம், குட்டை மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நீர் நிலைகளில் தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

நீர் வழி தடங்கள் முறையாக தூய்மையாக பராமரிக்கப்படவில்லை என்றால், மாவட்ட அரசு நிர்வாகமும், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களும்தான் இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதற்கான அதிரடி உத்தரவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர்கால அடிப்படையில் பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply