ஆயுதங்கள் இயக்குநரகத்தின் (ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள்) முதல் தலைமை இயக்குநராக இ ஆர் ஷேக் பொறுப்பேற்றார். இது ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் மாற்று அமைப்பாகும்
1984-ம் ஆண்டை சேர்ந்த இந்திய ஆயுதக் தொழிற்சாலை சேவை (IOFS) அதிகாரியான ஷேக், நவீனமயமாக்கலின் முன்னோடியாக இருந்தார். குறிப்பாக, வரன்கான் ஆயுதக் தொழிற்சாலையில் சிறிய ஆயுத வெடிமருந்து தயாரிப்பதற்கான நவீன உற்பத்தி அமைப்பை நிறுவுவதற்கு அவர் பங்காற்றியுள்ளார்.
துணை தலைமை இயக்குநர் – புரொப்பலென்டுகள் மற்றும் வெடிபொருட்கள் – ஆக பணியாற்றிய அவர், உற்பத்தித் திறன், தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த வழிவகுத்த பல ஆலை நவீனமயமாக்கல் திட்டங்களை மேற்பார்வையிட்டார். பீரங்கி வெடிமருந்துகளுக்கான பை-மாடுலர் சார்ஜ் சிஸ்டத்தின் (பிஎம்சிஎஸ்) வெற்றிகரமான உள்நாட்டு உருவாக்கத்திற்கும் அவர் தலைமை தாங்கினார்.
கான்பூர் ஐஐடியில் பட்டம் பெற்ற திரு ஷேக், பல்வேறு ஆயுத தொழிற்சாலைகளில் பணியாற்றியுள்ளார். இடார்சியில் உள்ள ஆயுத தொழிற்சாலையின் பொது மேலாளராகவும் அவர் பணியாற்றினார். ஆயுத தொழிற்சாலை வாரியம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்கு அவர் பலமுறை சென்றுள்ளார். அவரது முன்மாதிரியான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், 2020-ம் ஆண்டு ஆயுத் ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.
–எம்.பிரபாகரன்