மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, தனது கட்சி அமோக வெற்றி பெற்றாலும், நந்திபூர் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான செல்வி மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜ.வுக்கு தாவிய சுவேந்து அதிகாரியிடம் அவர் தோற்றுப்போனார்.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்க மாநிலம், பவானிப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி 71.9% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலை 58 ஆயிரத்து 835 வாக்கு வித்தியாசத்தில் அவர் வென்றார்.
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com