மனித கழிவுகளை மனிதனே வெறுங்கைகளால் அகற்றும் அவல நிலை!-என்று தீரும் இந்த கொடுமை..!

இடம் : திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, காட்டூர், சக்தி நகர். நாள்: 04.10.2021., நேரம் : மாலை 2.30 மணி முதல் 4 .30 மணிவரை.

முக கவசமோ, கவச உடைகளோ, கையுறையோ….இப்படி எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல்; பயன்படுத்தாமல், வறுமையின் காரணமாக, துற்நாற்மெடுக்கும் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளை சுத்தம் செய்து, அவற்றில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளை வெறுங்கைகளால் அள்ளி தூய்மை செய்யும் பணியில் நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுப்பட்டுவருவது. உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.

இதுப்போன்ற ஒரு சம்பவம் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காட்டூர், சக்தி நகர் பகுதியில் இன்று (04.10.2021) நடந்தது.

இடம் : திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, காட்டூர், சக்தி நகர். நாள்: 04.10.2021., நேரம் : மாலை 2.30 மணி முதல் 4 .30 மணிவரை.

இங்கு மட்டுமல்ல; இந்தியா முழுவதும் தூய்மை பணியாளர்களின் நிலைமை பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது..!-இந்த தேசத்தில் பிறந்ததைத் தவிர; இவர்கள் வேறு எந்த பாவமும் செய்யவில்லை.

விண்வெளியில் ராக்கெட்டை விட்டு பாராட்டைப் பெறுவதற்கு கோடிக் கணக்கான ரூபாய்களை செலவு செய்யும் நமது அரசாங்கம். பூமியில் நம்மோடு சகமனிதர்களாக பிறந்து, வாழ்ந்து; நமக்காகவும், நமது சந்ததியினருக்காகவும் துப்புரவுப் பணியில் தொடர்ந்து பல தலைமுறைகளாக ஈடுப்பட்டு மகத்தான சேவை செய்து வரும் அப்பாவி தூய்மை பணியாளர்களுக்கு, இதுவரை எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த கொடுமைக்கு என்றைக்குதான் விடிவு காலம் பிறக்குமோ?!

மத்திய, மாநில அரசுகள்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply