ஷில்லாங்கில் “வடகிழக்கு பிராந்திய வளர்ச்சியில் வடகிழக்குக் கவுன்சிலின் மாறிவரும் பங்களிப்பு” என்பது பற்றிய பயிலரங்கு நடைபெற்றது. இதில் மாண்புமிகு குடியரசு துனைத்தலைவர் எம். வெங்கைய நாயுடு தலைமை விருந்தினராகக் கலந்து கொன்டார். வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் ஜீ. கிஷன் ரெட்டி, மேகாலயா ஆளுனர் சத்ய பால் மாலிக், முதலமைச்சர் கொன்றாட் சங்மா, வட கிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கான துரறயின் இணை அமைச்சர் பி. எல். வர்மா மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்சியில் கலந்து கொண்டனர்.
வட கிழக்கு மாநிலங்களில் சிறந்த சாலைகள், ரயில்வே, விமானம் மூலம் போக்குவரத்துத் தொடர்பையும் அடிப்படை கட்டமைப்பையும் விரிவாக்க அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு. ஜீ. கிஷன் ரெட்டி எடுத்துரைத்தார். தலைநகரங்களை ரயில் போக்குவரத்துடன் இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய மூன்று வட கிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் ஏற்கெனவே இந்திய ரயில்வேயுடன் இணைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஐந்து தலை நகரங்களை இனைக்கும் பணி நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார். விமானபோக்குவரத்து தொடர்பின் ஒரு பகுதியாக இரண்டு பெரிய தலைநகர விமான போக்குவரத்து திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
“நாட்டின் இதர மாநிலங்களுக்கு இணையாக 8 மாநிலங்களைக் கொண்டுவருவதற்கான நமது பிரதமரின் தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் பாடுபடவேண்டும்” என்று திரு ஜீ கிஷன் ரெட்டி கேட்டுக்கொன்டார்.
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிலுள்ள ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற பாரம்பரிய, கலாச்சார மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளில் வெங்கைய நாயுடு உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
–எஸ்.சதிஸ் சர்மா
Good meeting…….