பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் காக்கவே புதிய மீன்வளச் சட்டம் கொண்டுவரப்படுகிறது!- மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்.

பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் காக்கவே புதிய மீன்வளச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் தெரிவித்தார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் அமைச்சர் டாக்டர் எல்.முருகன், ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இன்று மீனவப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

மீனவர்களின் நலன்களைக் காக்க பிரதமர் நரேந்திர மோதி முதன்முறையாக ஒரு தனி அமைச்சகத்தை அமைத்துள்ளார்.

மேலும், கடற்பாசி பூங்காவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் பாரம்பரிய மீனவர் சமுதாயத்தையும், அவர்களின் வர்த்தகத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

மத்திய அரசால் சர்வதேச தரத்திலான 5 பிரத்யேக மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ளது.

மீன்வளத் துறை மூலம் இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அதிகப் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதே நம் அரசாங்கத்தின் நோக்கமாகும்.

புதிதாக வரவுள்ள மீன்வளச் சட்டம் மீனவர் சமுதாயத்தின் பிரச்சனைகளைத் தீர்க்கும். பாரம்பரிய மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் வகையிலேயே இந்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது, என்றார்.

திவாஹர்

Leave a Reply