நிறைவு ஈவுத்தொகையாக ரூ.174.23 கோடிக்கான காசோலையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் ஹட்கோ வழங்கியது.

2021-21 நிதியாண்டுக்கு ஹட்கோ தனது பங்குதாரர்களுக்கு மொத்தம் ரூ.435.41 கோடி ஈவுத்தொகை வழங்கியுள்ளது. இது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகப் பங்கின் ஒரு பகுதியாக நிறைவு ஈவுத்தொகையாக ரூ.174.23 கோடிக்கான காசோலையை இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி-யிடம் வழங்கியது. இந்த நிறுவனத்தில் அதிகபட்சமாக 61.08% பங்குகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் பெற்றுள்ளது.

ஊரக மேம்பாட்டு அமைச்சகம் 20.73% பங்கினைப் பெற்றுள்ள நிலையில் 18.19% பங்கினைப் பொதுமக்கள் பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு ரூ.2174.53 கோடி லாபம் ஈட்டியதோடு ஒப்பிடுகையில் 2020-21ல் இந்த நிறுவனம் மொத்தம் ரூ.2268.64 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஹட்கோ தனது பங்குதாரர்களுக்கு மொத்தம் 21.25% ஈவுத்தொகையை அறிவித்தது.

திவாஹர்

One Response

  1. MANIMARAN October 12, 2021 10:02 pm

Leave a Reply