(சு)வாசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு..!- வணக்கம்.
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்பது சட்டம் அல்ல!-ஆனால், அப்படி செய்தால்; அதுக்கு பெயர்தான் அறம்; தர்மம்; தானம்..!
ஆயுள் காப்பீடு என்பது நமது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உதவும்!-ஆனால், நாம் செய்யும் அறம்; தானம்; தர்மங்கள்..! நம் கூடவே தொடர்ந்து பயணிக்கும்..!-நமது அடுத்த ஜென்மத்தையும் அது நிச்சயம் தீர்மானிக்கும்.
ஆம், நெருப்பை நீரால் அணைப்பதைப் போல; நமக்கு வரும் தீமைகளையும், ஆபத்துக்களையும் அறம் சார்ந்த தானம்; தர்மங்களால் நிச்சயம் தடுக்க முடியும். இதை எழுத்துக்களாலோ; வார்த்தைகளாலோ; நிரூப்பிக்கவோ; உணர்த்தவோ இயலாது! ஏனென்றால், இது உணர்ச்சிப்பூர்வமானது; உணர்வுப்பூர்வமானது. இவற்றை அனுபவித்துப் பாருங்கள்..! இவற்றின் ஆனந்தம் புரியும்.
இனம் பார்த்தோ; மதம் பார்த்தோ; நிறம் பார்த்தோ; மொழி பார்த்தோ; எக்காரணத்தை முன்னிட்டும் தானம், தர்மம் செய்யாதீர்கள்!-(பாத்தி)திறம் பார்த்து உதவுங்கள்..!-ஆம், நீங்கள் செய்யும் தானம், தர்மங்களை எந்த காலத்திலும்; எந்த சூழ்நிலையிலும்; எந்த ரூபத்திலும் அதை உங்களுக்கு திருப்பி செலுத்த முடியாத; திரும்ப செய்ய இயலாத, விளிம்பு நிலையில் உள்ள முன், பின் தெரியாத; அறியாத பரம ஏழைகளுக்கு உதவுங்கள்..!-அது தான் உண்மையான தானம்!-அப்படிப்பட்ட தானம், தர்மங்களுக்கு; விலை மதிக்க முடியாத நற்பலனை, காலம் நமக்கு திரும்ப, திரும்ப கொடுத்துக்கொண்டே இருக்கும். இது மதம் சார்ந்த நம்பிக்கை அல்ல; அறம் சார்ந்த அனுபவம்..!
விழாக்கள், பண்டிகைகள், பிறந்த நாள், மணநாள்..! என்பதெல்லாம் நாமும்; நம் குடும்பத்தாரும் மற்றும் நமது உறவுகள் மட்டுமே உண்டு, உடுத்தி கொண்டாடி மகிழ்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல; மாறாக, முன் பின் அறியாத; தெரியாத விளிம்பு நிலையில் உள்ள ஏழை குழந்தைகளுக்கும், அவரது குடும்பங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்து தற்காலிகமாகவோ; நிரந்தரமாகவோ அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகதான்!
நாம் பிறக்கும் போது எதையும் கொண்டு வரவில்லை; நாம் இறக்கும் போதும் எதையும் கொண்டு போக போறதுமில்லை! -எக்காலத்திலும் நம்மோடு கூடவே பயணிப்பது நாம் செய்யும் பாவங்களும்; புண்ணியங்களும்தான்!-இதில் யாருமே திருத்தம் செய்ய இயலாது. இல்லாமை வேறு; இயலாமை வேறு; ஆனால், விரும்பாமை பாவம்!
எனவே, பண்டிகைகளையும், விழாக்களையும் பயனுள்ளதாக கொண்டாடுங்கள்..! இருப்பதை பகிர்ந்து கொடுங்கள்; இயன்றவரை இல்லாதவர்களுக்கு உதவுங்கள்…! வாழும் போதும்; நம் வாழ்க்கைக்கு பிறகும், நமது சந்ததிகள் நிச்சயம் நிம்மதியாக இருப்பார்கள்.
கடந்த ஐந்து தசாப்தங்களாக யாருடைய தயவும்; நிதி உதவியும் இல்லாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்களையும், குழந்தைகளையும், நாம் வாழவைத்திருக்கிறோம். வாழ நல்வழியும் காட்டியிருக்கிறோம். அதற்காக மானத்தையும்; உயிரையும் தவிர; மற்ற எல்லாவற்றையும் இழந்தும் இருக்கின்றோம்!-ஆனாலும், ஆத்ம திருப்தியோடு; மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கின்றோம்.
ஆம், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்‘.
விளிம்பு நிலை மக்களுக்கு நீங்களும் ஏதாவது உதவி செய்ய விரும்பினால், எமது ”UTL MEDIA” குழுவை, 9842414040 என்ற வாட்ஸ் அப் (WhatsApp) எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com
Yes, you said right sir……