தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் (என்எச்பிசி) 2021-ஆம் நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகை ரூ 249.44 கோடியை மத்திய அரசுக்கு கடந்த 21-ம் தேதி வழங்கியது. இந்த்த் தொகையை என்எச்பிசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் திரு ஏ கே சிங், மத்திய மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர் கே சிங்கிடம் ஒப்படைத்தார்.
மேலும், இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.890.85 கோடி கடந்த மார்ச் 5-ம் தேதி வழங்கப்பட்டது. மொத்தம் இதுவரை ரூ.1,140.28 கோடி ஈவுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 35 பைசா ஈவுத்தொகை வழங்க இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி நடந்த கூட்டத்தில் பரிந்துரைத்தனர். மேலும் இடைக்கால நிவாரணமாக ஒரு பங்குக்கு ரூ.1.25 கடந்த மார்ச் 5-ம் தேதி வழங்கப்பட்டது. மொத்தம் ஒரு பங்குக்கு ரூ.1.60 ஈவுத்தொகை வழங்கப்பட்டது. என்எச்பிசி நிறுவனத்திற்கு தற்போது 7 லட்சம் பங்குதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மொத்த ஈவுத்தொகையாக 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.1,607.21 கோடி செலுத்தப்பட்டது.
என்எச்பிசி நிறுவனம் 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.3,233.37 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
–எஸ்.சதிஸ் சர்மா