நடிகர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்!-UTL MEDIA ஆசிரியரின் கடிதமும், காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையும்!

File photo

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் உடல் நலம் குறித்த உண்மையான தகவலை வெளியிடுமாறு, இன்று (29.10.2021) மதியம் 1.42 மணிக்கு, சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு, நமது UTL MEDIA-வின் இயக்குனரும், உள்ளாட்சித்தகவல் ஊடகத்தின் ஆசிரியருமான Dr.துரைபெஞ்சமின் அவர்கள், மின் அஞ்சல் மூலம் கோரிக்கை அனுப்பி இருந்தார்.

அதன் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அனுமதியோடு, நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் உடல் நலம் குறித்த உண்மையான தகவலை, சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அதனை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

சிறப்புடையீர் வணக்கம்.
நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் உடல் நலம் எப்படி இருக்கிறது? உண்மையான தகவலை மக்களுக்கு அளிக்க விரும்புகின்றோம். இதன் மூலம் பல்வேறு ஊடகங்களில் வெளிவரும் வதந்திகளையும், பொய்யான கற்பனை செய்திகளையும் தடுக்க முடியும் என்று நாங்கள் முழுமையாக நம்புகின்றோம். அவர் உடல் நலம்; ஆத்ம நலம் பெற இதன் மூலம் வாழ்த்துகின்றோம். உலகத்தில் உண்மையானச் செய்திகளை மட்டுமே வெளியிடும் ஒரே ஊடகம்: www.ullatchithagaval.com

Regards and Thanks.

Dr,DURAI BENJAMIN
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
UTL MEDIA PVT LTD
E-mail : ullatchithagaval@gmail.com

முக்கிய குறிப்பு:

சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று (29.10.2021) மதியம் வெளியிட்ட, நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்த செய்தி அறிக்கையின் முகப்பில், மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவால்; ஆண்டு தவறாக பதிவாகிவிட்டது. ஆம், 2021 என்று அதில் குறிப்பிடுவதற்கு பதிலாக; 2020 என்று தவறாக பதிவாகியிருந்தது. உடனே, நமது உள்ளாட்சித்தகவல் ஊடகத்தின் ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்கள், சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டினார். அதன் பின்னர் காவேரி மருத்துவமனை நிர்வாகம் 2021 என்று திருத்தம் செய்து சரியாக வெளியிட்டது.

இதோ, ஆண்டு திருத்தம் செய்து சரியாக வெளியிட்ட அறிக்கை.

-கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply