16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி ரோம் சென்றடைந்தார்.
இத்தாலி அரசு அதிகாரிகள் மற்றும் இத்தாலியில் உள்ள இந்தியத் தூதர் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கான முக்கிய அமைப்பான ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் வந்து இறங்கியுள்ளேன். இந்த ரோம் பயணம் மூலம் வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
–திவாஹர்