Union Minister of State (Independent Charge) Science & Technology; Minister of State (Independent Charge) Earth Sciences; MoS PMO, Personnel, Public Grievances, Pensions, Atomic Energy and Space, Dr Jitendra Singh will inaugurate the seventh edition of India International Science festival, IISF at Panaji, Goa to be held from December 10 to 13, 2021.
Dr Jitendra Singh said, the theme of IISF 2021 is ‘AzadiKaAmritMahotsav’ – celebrating Creativity, Science, Technology and Innovation for a prosperous India. He said, this year twelve programs will be conducted in this mega event based on this theme.
Dr Jitendra Singh said that the series of India International Science Festival (IISF) is an integral part of India’s long-term vision in developing and widening the spectrum of scientific temper for sustainable development and new technological innovations in India. He said, it also aims to build a strategy for rural India through the advancement of Science and Technology.
The Minister informed that IISF will provide a platform to young students, scientists and technocrats from across India for exchange of knowledge and ideas and also supporting flagship programmes like ‘Swach Bharat Abhiyan’, Swasth Bharat Abhiyan ‘Make in India’, ‘Digital India’, ‘Smart Villages’, ‘Smart Cities’ ‘ NamamiGange’, ‘Unnath Bharat Abhiyan’ initiated by the Prime Minister Narendra Modi in the last seven years. He said, the main aim of the Science Festival is to bring into use the innovations by the people and develop technology that is affordable to the masses.
Dr Jitendra Singh said that this year India is celebrating 75th year of Independence as AazadiKaAmritMahotsav and the Prime Minister Shri Narendra Modi has given the ideas of five pillars to celebrate it, which will be reflected through various programs inIISF 2021.
India International Science festival (IISF) is a joint program of Ministry of Science & Technology, Ministry of Earth Sciences and VijnanaBharati (VIBHA) a swadeshi movement of Bharat. The first program of IISF was held in year 2015 and sixth edition of this annual event was organised in year 2020. The main purpose of IISF is to celebrate science along with people in India and across the globe.
The programmes to be undertaken during these four days will include Science Film Festival, Science Literature Festival, Engineering Students Festival, Science Village Festival, Traditional Crafts and Artisans Festival, Guinness Book of World Records, Festival of Games and Toys, Global Indian Scientists and Technocrats Meet, Eco-Festival, New Age Technology Show, National Social Organizations and Institutions Meet.
xxxxxxxxx
இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் (ஐஐஎஸ்எப்) ஏழாவது அமர்வை கோவாவில் உள்ள பனாஜியில் டிசம்பர் 10 ஆம் தேதி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், மக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார்.
இந்த அறிவியல் விழாவின் கருப்பொருள், இந்தியாவின் முன்னேற்றத்திற்கான படைப்பாற்றல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டாடும் “சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா” ஆகும் என டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்தியாவில் நீடித்த வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அறிவியல் உணர்வை விரிவுபடுத்தி மேம்படுத்தும் இந்தியாவின் நீண்ட கால தொலைநோக்கின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்திய சர்வதேச அறிவியல் விழாக்கள் திகழ்கின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஐஐஎஸ்எப் இளம் மாணவர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்களுக்கு தங்களது அறிவியல் அறிவு மற்றும் சிந்தனைகளை பரிமாறிக் கொள்ளும் தளமாக விளங்கும் என அமைச்சர் கூறினார். தூய்மை இந்தியா இயக்கம், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, பொலிவுறு நகரங்கள் உள்ளிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த ஏழு ஆண்டுகளாக மேற்கொணடுள்ள திட்டங்களுக்கு இந்த ஐஐஎஸ்எப் ஊக்கமளிக்கும் என கூறியுள்ள அவர். அறிவியல் விழாவின் முக்கிய நோக்கம், புதுமையான கண்டுபிடிப்புகளை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சென்று அவர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதாகும் என தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வரும் நிலையில், இதனைக் கொண்டாட பிரதமர் நரேந்திர மோதி ஐந்து தூண்கள் என்னும் யோசனையை தெரிவித்துள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
–எஸ்.சதிஸ் சர்மா