Prime Minister Shri Narendra Modi will visit Mahoba and Jhansi districts of Uttar Pradesh on 19th November 2021.
In a significant initiative to alleviate water distress, at around 2:45 PM, Prime Minister will inaugurate multiple projects in Mahoba. These projects will help alleviate the issue of water shortage in the region and bring much needed relief to the farmers. These projects include Arjun Sahayak Project, Ratauli Weir Project, Bhaoni Dam Project and Majhgaon–Chilli Sprinkler Project. The cumulative cost of these projects is more than Rs. 3250 Crore and their operationalisation will help in irrigation of around 65000 hectares of land in the districts of Mahoba, Hamirpur, Banda and Lalitpur, benefitting lakhs of farmers of the region. These projects will also provide potable drinking water to the region.
At around 5:15 PM, Prime Minister will participate in a programme during which he will lay the foundation stone of 600 MW Ultramega Solar Power Park at Garautha in Jhansi. It is being constructed at a cost of over Rs 3000 crore, and will help provide the dual benefits of cheaper electricity and grid stability.
Prime Minister will also inaugurate Atal Ekta Park in Jhansi. Named after Former Prime Minister Shri Atal Bihari Vajpayee, the park has been built at a cost of over Rs 11 crore, and is spread across an area of about 40,000 square metre. It will also house a library, as well as a statue of Shri Atal Bihari Vajpayee. The statue has been built by the renowned sculptor Shri Ram Sutar, the man behind the Statue of Unity.
xxxxxx
பிரதமர் நரேந்திர மோதி வரும் 19ம் தேதியன்று உத்தரப்பிரதேசத்தின் மகோபா மற்றும் ஜான்சி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்த்து வைப்பதற்கான குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக பிரதமர் 19ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு மகோபாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டங்கள் அந்தப் பிராந்தியத்தில் உள்ள தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கவும் விவசாயிகள் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவியாக அமையும். அர்ஜுன் சகாயக் திட்டம், ரடோலி வையர் திட்டம், போவானி அணைக்கட்டு திட்டம் மற்றும் மஜ்கோவன்-சில்லி நீர்த்தெளிப்பான் திட்டம் ஆகியன தொடங்கி வைக்கப்படவுள்ள திட்டங்கள் ஆகும். இந்தத் திட்டங்களின் ஒட்டுமொத்த செலவு ரூ. 3,250 கோடிக்கும் அதிகமாகும். இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது மகோபா, ஹமீர்பூர், பாண்டா மற்றும் லலித்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 65,000 ஹெக்டேர் பரப்பிலான நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். இதன் மூலம் இந்தப் பிராந்தியத்தின் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவர். மேலும் இந்தத் திட்டங்கள் இப்பகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கவும் வழிவகுக்கும்.
மாலை 5.15 மணி அளவில் பிரதமர் ஜான்சியின் கரௌவ்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று 600 மெகாவாட் அல்ட்ரா மெகா சூரிய மின்சக்தி பூங்காவிற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த சூரிய மின்சக்தி பூங்காவானது ரூ 3,000 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ளது. இந்தத் திட்டம் குறைந்த செலவில் மின்சாரம் கிடைத்தல் மற்றும் மின்சார விநியோக அமைப்பில் நிலைத்தன்மையை உருவாக்கல் என்ற இரட்டைப் பலன்களை வழங்கும்.
பிரதமர் ஜான்சியில் அடல் ஏக்தா பூங்காவையும் தொடங்கி வைக்கிறார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் பூங்காவானது ரூ 11 கோடிக்கும் அதிகமான செலவில் சுமார் 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்தப் பூங்காவில் ஒரு நூலகமும் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் சிலையும் நிறுவப்படவுள்ளது. ஒற்றுமைக்கான சிலையை வடிப்பதில் பங்கேற்றிருந்த புகழ்பெற்ற சிற்பி ராம் சுதர் இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார்.
–திவாஹர்