வேளாண் சட்டங்கள் வாபஸ்!- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!- நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த 3 சட்டங்களை திரும்ப பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

File photo

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த நிலையில், இன்று (நவ.,24) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைகளில் சுமார் ஓராண்டாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து கடந்த 19ம் தேதி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோதி அறிவித்தார். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள், வரும் 29-ம் தேதி துவங்கவுள்ள பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோதி தலைமையில் டில்லியல் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply