On the International Day of Persons with Disabilities, Prime Minister Narendra Modi said,
“On International Day of Persons with Disabilities, I would like to appreciate the stellar achievements and contributions of persons with disabilities to India’s progress. Their life journeys, their courage and determination is very motivating.
The Government of India is actively working to further strengthen infrastructure that empowers persons with disabilities. The emphasis remains on equality, accessibility and opportunity”.
xxxxxxxxx
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில்,
“சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில், இந்தியாவின் முன்னேற்றத்திற்காக மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள பங்களிப்பு மற்றும் வியத்தகு சாதனைகளை பாராட்ட விரும்புகிறேன். அவர்களது வாழ்க்கைப் பயணங்கள், அவர்களது துணிச்சல் மற்றும் மன உறுதி மிகவும் ஊக்கமளிக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் விதமாக கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த, மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. சமத்துவம், எளிதில் அணுகுதல் மற்றும் வாய்ப்புகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
–திவாஹர்