இந்த நிதியாண்டில் அதிகளவு நிலக்கரி விநியோகம்!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் நவம்பர் வரை கோல் இந்தியா நிறுவனம் அதிகளவு நிலக்கரியை வழங்கியுள்ளது. 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 421.11 மில்லியன் டன் நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகமாகும். சிங்கரேனி நிலக்கரி நிறுவனம் இந்த ஆண்டு 42.47 மில்லியன் டன்  நிலக்கரியை அனுப்பியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 60 சதவீதம் அதிகமாகும்.

 நிலக்கரி அமைச்சகம் குறுகிய காலத்தில் அதிகளவு நிலக்கரியை அகழ்ந்து எடுக்க புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி வருகிறது. மக்களவையில் இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply